உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மெரோடாக்

183


“சும்மா இருடா, தொண தொணன்னு பேசிண்டே இருக்கறே. அதுதான் நட்சத்திரம்—பள பளன்னு மின்னும்—மேலே இருக்கு......”

“போ, மாமா! அது என்னன்னு கேட்டா சொல்லத் தெரியல்லே, கோபம் வர்ரது. இதோ, பார், இந்த மாமாவைக் கேட்கறேன், அவர் நல்ல மாமா, சொல்லுவார், மாமா! பெரிய மாமா! நீ சொல்லேன்—அது என்னது?”

“எதைக் கேட்கிறேடா கண்ணா! ஓ! நட்சத்திரத்தையா?”

“ஆமாம், மாமா! அது என்னது? நட்சத்திரம்னா என்னா?”

“அதுவா! மேலே, சாமிகள் இருக்கேன்னோ......”

“சாமிகள் மேலேயா இருக்கு? இங்கே, கோயில்லே இருக்கே?”

“நெஜமான சாமிகளெல்லாம், மேலேதான் இருக்கு. அந்தச் சாமிகளெல்லாம், சுருட்டு பிடிக்கிறபோது, பளிச்சு பளிச்சுன்னு தெரியறது! இங்கே, சுருட்டு, சிகரட்டு, இதை பிடிக்கச்சே தெரியுதேன்னோ, அதுபோல”

“சாமிகள் சுருட்டு பிடிக்கற நெருப்பா! இந்த மாமா சுத்த மக்கு! இது தெரியல்லே, கேட்டா கோபம் வர்ரது? சாமிகளோட சுருட்டு நெருப்புதான் நட்சத்திரம்”

சிறுவன் உண்மையிலேயே, களித்துக் கூத்தாடினான்—தன் வயதுச் சிறுவர்களிடமெல்லாம் சென்று கூறினான், கதை கட்டும் ‘மாமா’ சொன்னதை! பல சிறுவர்கள், நட்சத்திரம், சாமிகள் சுருட்டு நெருப்பு என்று எண்ணினர்—பொய்தான்—என்றாலும், விவரமும் விளக்கமும் பெறமுடியாத வயதுள்ளவன், கேட்ட கேள்விக்கு, உண்மையான பதில் கூறினால், பயனில்லை, எனவே