உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மாஜி கடவுள்கள்


தந்திரமறிந்த ‘மாமா’, சிறுவனுக்காக, அவன் ஆவலை அடக்க, ஓரளவு அவனுக்குப் புரியக்கூடிய விதமாக, ஒரு பொய்யைக் கூறினார்—சிறுவன், தனக்கு நட்சத்திரம் என்றால் என்ன என்பது புரிந்துவிட்டது, என்று எண்ணிக் கொள்கிறான்.

எவ்வளவு காலம், இந்தப் பொய், சிறுவன் மனதிலே தங்கி இருக்கமுடியும்? உண்மையை உணரும் உள்ள வளர்ச்சி ஏற்பட்ட பிறகு, ‘மாமா’ சொன்ன கதையையா நம்புவான்!

இப்படி ‘மாமா’ சொன்ன கதைகள் பலப்பல—நல்ல எண்ணத்தோடு சொல்லப்பட்ட கதைகளும் உண்டு, ஏமாற்றுவதற்காகவே சொன்னவைகளும் உண்டு.

மனித குலம், சிறுபிள்ளைப் பருவத்திலே இருந்தபோது, மனதிலே, இயற்கைக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும், கிளறிவிட்ட, சந்தேகங்களுக்கு, இப்படிப் பலப்பல கதைகள் கட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தக் கதைகளையே, நாளாவட்டத்தில், எத்தர்கள், தங்கள் சுய இலாபத்துக்காகச் சரக்கு ஆக்கிப் பிழைக்கலாயினர்! பிழைப்புக்குப் பொய்க் கதைகள் பயன்படவே, கதை கட்டுவோரின் தொகை வளர்ந்தது, கதைகள் பெருகின! ஒவ்வொரு, விளங்காப் பொருளுக்கும், புரியாத நிகழ்ச்சிக்கும், கதைகள் கட்டலாயினர்! கபடர்களிடம், இந்தக் ‘கதைகள்’ சிக்கியதால், நாளாவட்டத்தில், கள்ளனிடமுள்ள கன்னக்கோல் போலாகிவிட்டன, இந்தக் கதைகள்.

அறிவுத் தெளிவு ஏற்பட ஏற்பட, கதைகளை நம்ப மறுக்கும் மனப்பக்குவமும், ஏமாற்றுக்காரரின் பிழைக்கும்வழி இது என்ற அறிவும் மேலோங்கிடவே, கதைகள் சீந்துவாரற்றுப் போயின—இங்கு அல்ல!!—உலகிலே