மெரோடாக்
185
மற்ற நாடுகளில்—உள்ளத்தை வளமாக்கிக்கொண்ட நாடுகளிலே!—இங்கோ—கட்டிவிடப்பட்ட கதைகளைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிப்பவர்களைக் கண்டிக்கும் ‘மேதை’கள் ஏராளம்!!
நம்பமறுக்கிறாயா நாத்திகனே!
நம்ப முடியவில்லையோ, பெரிய ஞானஸ்தனோ?
உனக்குப் புரியவில்லை அந்த மகிமை—மந்தமதி—பாபம் கவ்விக்கொண்டிருக்கிறது—அஞ்ஞானி!
கதைதான்—ஆனால் வெறும் கதை அல்ல—அரிய பெரிய தேவ இரகசியங்களை விளக்கவேண்டும் என்பதற்காக, தவச் சிரேஷ்டர்கள், தந்தருளிய, தத்துவார்த்த விசேஷம் நிறைந்த கதைகள்—பாவீ! அவைகளை எள்ளி நகையாடாதே!
கதைகள்! ஆமாம், அவைகளை அப்படியே கவனித்து, இதற்கு என்ன பொருள், அதற்கு என்ன விளக்கம், இது நடக்கக்கூடியதா! என்றெல்லாம் கேள்விகளைக் கேட்டால், நிச்சயமாக மனக் குழப்பம்தான் ஏற்படும். மனிதனுடைய வாழ்வு மேம்பாடு அடைவதற்காக, அருமையான பாடங்கள், நீதிகள், அந்தக் கதைகள் மூலம் கிடைக்கின்றன! கதைகளை நம்ப மறுக்கலாம்—கதைகளை விட்டுத்தள்ளு—ஆனால், அந்த நீதிகள்! அவைகளை இழப்பதா—நீசத்தனமல்லவா இது!!
இதுபோல, பலப்பல ‘படிகள்’ உண்டு, பழமைக்காகப் பரிந்து பேசுபவர்களின், வாதங்களில்! பழைய கதைகளைவிட மறுக்கும் போக்கைத்தான் இவ்வளவு வகையான வாதங்களும் ஏற்படுத்துகின்றன!
விளக்கம் கிடைக்காத நாட்களில், விசித்திரமாகத் தோன்றிய நிகழ்ச்சிகளுக்கும் பொருள்களுக்கும், தரப்பட்ட