6
மாஜி கடவுள்கள்
பேச நேரிட்டது. பகுத்தறிவும் பயமும் கலந்த உருவில் டையகோராஸ், காட்சியளித்தான். பிறகு பயம் நீங்கி பகுத்தறிவும் சகிப்புத்தன்மையும் கலந்த உருவம் காண்கிறோம். அந்த உத்தம உருவமே, சாக்ரட்டீஸ். சாக்ரட்டீசும், சிறு மதியைச் சாடினான்; கடவுள் பெயர் கூறி நடத்தப்படும் காரியங்களைக் கண்டித்தான்; அறிவுக்கண் கொண்டு பாருங்கள், ஆலயங்களிலே கொலுவீற்றிருக்கும் தெய்வங்களின் ஆபாசம் தெரியும் என்று பேசினான். டையகோராஸ், சாக்ரட்டீஸ் இருவரும், பகுத்தறிவுக்குப் படைத்தலைவர்கள்; வெவ்வேறு நிலை. முன்னவர் ஏறக்குறைய முறியடிக்கப்பட்டார், விரட்டி அடிக்கப்பட்டார்; சாக்ரட்டீஸ் விரட்டி அடிக்கப்படவில்லை, பயந்து ஓடவில்லை, பணியவுமில்லை, சாகடிக்கப்பட்டார். வெளிநாட்டிலே அல்ல, கிரேக்க நாட்டிலேயே. பகுத்தறிவு ஊராரின் பகை கண்டு, ஓடி ஒளிந்துகொண்டது முதலில். சாக்ரட்டீசின் நாளிலேயும் ஊர்ப்பகை இருந்தது. ஊராள்வோரின் பகையும் பிறந்தது; ஆனால், ஊரைவிட்டு ஓடவில்லை. உயிர் துறந்தார் ஊரிலேயே பகுத்தறிவு டையகோராஸ் காலத்துக்கும் சாக்ரட்டீஸ் காலத்துக்கும் இடையே வலுவடைந்தது, என்பதுதான் பொருள். முதலில், பகுத்தறிவைப் பேசமட்டுமே ஆள் இருக்கக் கண்டனர். சாக்ரட்டீஸ் காலத்திலே, பகுத்தறிவுக்காகப் பேசமட்டுமல்ல, கஷ்ட கஷ்டம் ஏற்க, உயிரையே தரச் சித்தமாக இருக்கும் சிலரை உலகினர் கண்டனர்.
“அது தவறு இது தவறு என்று உளறுவர்; அடித்தால் அக்ரமக்காரர், அடங்குவர்”—இது, ஜனங்களின் பேச்சு. முதலில், டையகோராஸ் காலத்தில் காரிநித்துக்கு ஓடினான் டையகோராஸ் என்ற உடனே களிப்புடன் அந்த மக்கள், “கண்டீரோ வேடிக்கையை! கண்டபடி பேசி, நமது கடவுளரை ஏசினானே அந்தக் கயவன், அவன் கால்