186
மாஜி கடவுள்கள்
கதைகள், புராணச் சரக்குகள், என்று வெறுத்துத் தள்ளும், அறிவுத் தெளிவும், மனத் துணிவும், இங்கு ஏற்படவில்லை, பெரும்பாலான மக்களுக்கு! எனவேதான், பிரபஞ்ச உற்பத்தி, வளர்ச்சி ஆகியவை பற்றி, அன்று கட்டிவிடப்பட்ட அர்த்தமற்ற கதைகளையே இன்றும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்—அந்த நம்பிக்கையே ஆத்தீகம் என்றும் பேசுகிறார்கள்—அந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே, பூஜை, சடங்கு, திருவிழா, ஆகியவைகளை அமைத்துக்கொண்டு, பொருளையும் அறிவையும், நேரத்தையும் பாழாக்கிக் கொள்கிறார்கள்—பாரதவர்ஷத்தில்!!
பிரபஞ்ச உற்பத்தி பற்றிய விளக்கம், எளிதிலே கிடைக்கக்கூடியதல்ல—அறிவாற்றலும் ஆராய்ச்சியும் படிப்படியாக வளர்ந்து, இன்று ‘பிரபஞ்ச விளக்கம்’ கிடைத்திருக்கிறது, விஞ்ஞானத்தின் துணையினால். இந்த விளக்கம் கிடைக்காதபோது, நட்சத்திரத்துக்கு தந்திரக்கார ‘மாமா’ கேள்வி கேட்கும் சிறுவனுக்காகக் கட்டிவிட்ட கதைபோல, பல கதைகள், ஒவ்வொரு நாட்டிலும் கட்டி விடப்பட்டன—பூஜாரிக் கூட்டம் இந்தக் கதைகளைப் பயன்படுத்தி மக்களை ஆட்டிப் படைத்தன!
ட்யூடன் மக்கள், பிரபஞ்சம் உண்டானதற்கு ஒரு கதையை நம்பி வந்தனர்—அதற்குத் தக்கபடி, பூஜைகள் வகுத்துக்கொண்டனர்.
பாபிலோன் நாட்டிலே பிரபஞ்ச உற்பத்திக்கு, மற்றோர் வகையான கதை கட்டிவிடப்பட்டது.
இந்தக் கதையிலும் ட்யூடன் நாட்டுக்கதை போலவே, முதலில் சூன்யம்தான்! விண் இல்லை—மண் இல்லை—தேவர் இல்லை—மாந்தர் இல்லை! சூரியனோ சந்திரனோ கிடையாது—எங்கும் கடல் மயம்! இந்தக் கடலின் எல்லை,