மெரோடாக்
187
யாருமறியார்! ஆழ்கடலின் அடியே ஆதிக் கடவுள், இருந்தார்—அவர் திருநாமம், அப்சூ!
ஏதுமற்ற நிலைதான்—ஆழ்கடலினடியிலேதான் வாசம், எனினும் அப்சூ தேவன், டியாமட் என்ற தேவியை மட்டும் துணையாகப் பெற்றிருந்தார் வேறு பொருள் இல்லை—நெடுங்காலம்!!
பிறகு, இந்தப் பெருங்கடல், குழம்பலாயிற்று—கொந்தளிப்பு ஏற்பட்டது! ஏன்? அது தேவ இரகசியம்! கேட்பது, பாபம்! நம்பவேண்டும், அதுதான் ஆத்தீகம். பெருங்கடல் கொந்தளித்தது, லச்மு, லச்சாமூ எனும் இரு கடவுளர் வெளிக் கிளம்பினர், ஆழாழியினின்றும்! லச்மு, தேவன்! லச்சாமூ, தேவி! ஜோடி!! மீண்டும் ஆழாழி துயிலில் ஈடுபட்டது, நெடுங்காலம்! பிறகு, மற்றோர் கடவுள் ஜோடி கிளம்பிற்று—அன்ஷார் தேவன், கிஷார் தேவி! மீண்டும் உறக்கம்—பிறகு, அனு தேவனும் அனாடு தேவியும் கிளம்பினர்! கடைசியாகக் கிளம்பினார், வல்லமைமிக்க ஈயா தேவன்! இவர், தேவி வேண்டாம் என்பாரா? இவருக்குத் தேவிதான், டாம்கீனா என்ற பெண் தெய்வம்! இந்தக் கடவுளிடம், பெல் எனும் பிள்ளை பிறந்தான்—பிறந்தவன், பல காரியங்களைக் கவனிக்கத் தொடங்கினான்—மனித குலத்தை உற்பத்தி செய்யத் தொடங்கினான்—பெல், ஏறத்தாழ நமது புராணீகன் கூறும் பிரமன்போல!
பாபிலோன் பிரமனான பெல் தேவனுடைய போக்கும் நடவடிக்கையும், ஆழாழி அடியிலே இருந்த அப்சூவுக்குப் பிடிக்கவில்லை. மேலும் ஈயா தேவனின் பராக்கிரமமும் செல்வாக்கும் வளருவது கண்டு, ஏதும் செய்யாது எல்லையற்ற பெருங்கடலின் அடித்தட்டிலே இருந்து வந்த அப்சூ தேவனுக்குப் பொறாமை மூண்டது! ஆமாம், கடவுளுக்குத்