188
மாஜி கடவுள்கள்
தான், பொறாமை!! உடனே, தன் மைந்தனாம் மம்மு தேவனை அழைத்துக்கொண்டு, டியாமட் தேவியிடம் சென்று முறையிடுகிறான், அப்சூ! சிரிக்கிறீர்களா! ஆமாம், பாபிலோன் புராணமல்லவா, சிரிப்புத்தான் ஏற்படும்! எந்த நாட்டு அறிவாளியும், சிரிக்கத்தான் செய்வார்கள் இந்தக் கதை கேட்டு! பாபிலோன் நாட்டவரே, கைக்கொட்டித்தான் சிரித்தனர், அறிவு பிறந்ததும். அங்கும் அறிவு மேலோங்கியுள்ள எங்கும், இன்று இப்படிப்பட்ட கதைகளை, நம்பத்தான் மாட்டார்கள்! ஆகவே நீங்கள் பாபிலோன் புராணம் கேட்டுச் சிரிப்பதிலே தவறு இல்லை. ஆனால், சிரித்தது போதும், தயவுசெய்து, நமது புராணங்களை நினைவிற்குக் கொண்டுவாருங்கள்.
அந்த அசுரர்களின் தொல்லையைத் தாங்கமாட்டாமல் தேவேந்திரனானவன், தேவர்களை அழைத்துக்கொண்டு திருப்பாற்கடவிலே ஆதிசேஷன்மீது சயனித்துக்கொண்டிருந்த அரிபரந்தாமனிடம் சென்று, அடியற்ற நெடும்பனை போல வீழ்ந்து, ஸ்ரீமண் நாராயணமூர்த்தி! லட்சுமீ சமேதா! பாஞ்சசன்யா! தேவேந்திரன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். பாபிகளான அசுரர்கள் செய்யும் இம்சையை அடியேனால் தாங்கமுடியவில்லை, அவர்களைச் சம்ஹரிக்கும் சக்தி, சக்ரதாரியான தங்களுக்கே உண்டு, ஆபத்பாந்தவா! அனாதரட்சகா! அடியேன்மீது கிருபை பாலித்து, இப்போதே அசுரர்களைத் துவம்சம் செய்து, தேவலோகத்தை ரட்சிக்க வேண்டும்—பாபிலோன் அல்ல—நமது ஊர் பஜனைக் கோயில் புராணீகன் படிக்கிறான்—இன்றும்! சிரிக்கிறீர்களா!! பாபமல்லவா!! அதோ, தேவேந்திரனுடைய அவதியைத் துடைக்க, அரிபரந்தாமன் எழுந்தருளுவதற்கு முன்பே, அதை இராகபாவத்துடன் எடுத்துக் கூறிய புராணீகன், தன் அலுப்பைப் போக்கிக் கொள்ள, பால் சாப்பிடுகிறான்–தெரிகிறதா? பார்-அட்-லா