192
மாஜி கடவுள்கள்
கினான்—ஒன்று விண், மற்றொன்று மண்ணுலகு! முருகன், சூரபதுமனைக் கொன்றதும் ஒருபகுதி கோழி, மறுபகுதி மயில் ஆக மாறினது என்பார்களே நமது புராணீகர்கள், அதுபோல! பாபிலோனில், சூரசம்மாரத் திருவிழா இன்று கிடையாது—கந்தபுராணம் கிடைக்காது—பூஜைகள் கிடையாது மெரோடாக் தேவனுக்கு—தேவாலயம் கிடையாது, தேவதேவனுக்கு! ஏழு காற்றுக்குத் தத்துவார்த்தமும், பதினோறு இராட்சதர்களுக்குத் தத்துவார்த்தமும் கூறிடும், நாவாணிபர்கள் கிடையாது! குக்குடக் கொடியோய் போற்றி! சூரனை வென்றோய் போற்றி! என்று இங்கு இன்றும் பாடிடும் பக்தர்கள்—பாமரர் கூட்டத்திலே மட்டுமல்ல—ஹைகோர்ட் ஜட்ஜு எனும் நிலைக்குச் சென்றவர்களும் இருந்திடக் காண்கிறோம். பாபிலோன் புராணம், சூரசம்ஹாரத்தைவிட பயங்கரமான ஓர் போரில், அதிபலசாலியான தேவன், தந்தையைக் காத்த தேவன், வென்றான் என்று கூறுகிறது—எனினும், குருட்டறிவின்போது, கட்டப்பட்ட, கருத்தற்ற, கவைக்கு உதவாத கதை இது என்று அங்கு தள்ளிவிட்டனர். மெரொடாக் மாஜி கடவுளானான்! மெரொடாக், கடவுளாக இருந்தபோது, கோலாகலமான வாழ்வுதான்; அழகழகான ஆலயங்கள் உண்டு, அபிஷேகம் ஆராதனை உண்டு, அர்ச்சனையும் உண்டு, இங்கு, இன்றும், ‘சஹஸ்ரநாம அர்ச்சனை’ என்று செய்யப்படுகிறதல்லவா, இருட்டறிவிலே பாபிலோன் இருந்தபோது, பூஜாரிக் கூட்டத்தின் புரட்டுரையைப் புண்ய கதை என்று நம்பிக்கிடந்த பாமரர், மெரொடாக் தேவனை, 51 திருநாமங்களால் அர்ச்சிப்பராம்!
மயிலேறுவோய் போற்றி!
வள்ளி மணுளா போற்றி!
சூர சம்மாரா போற்றி!
தந்தைக் குபதேசித்தோனே போற்றி!