உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பாபிலோனியா நாட்டு முழுமுதற்கடவுள் பெயர் ஈயா! வடிவம், மீன்! எரிடு எனும் திருத்தலத்தில், ஈயா கடவுளுக்கு, அற்புதமான ஆலயம் கட்டி, விதவிதமான விழா நடத்தி, பாபிலோனியா மக்கள், தொழுது வந்தனர். ஈயா சாவ ரட்சகன்—சர்வ வல்லமை பொருந்தியவன்! கடலிலேதான் அந்தக் கடவுள் வாசம் செய்துவந்தார்! அண்டபிண்ட சராசரத்தையும், ஆதி மனிதனையும் அவர்தான் ஆக்குவித்தார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பாபிலோனியா நாட்டு மக்கள், இந்த மச்சாவதாரத்துக்கு மகோன்னதமான ஆலயம் கட்டிக் கொண்டாடினர்.

மச்சாவதாரம்

ச்சாவதாரம்! இங்கு இன்றும், பகவான் விஷ்ணு மச்சாவதாரம் எடுத்த மகிமையைப் பற்றிப் பேசுபவர்களும், வந்தனை வழிபாட்டுக்கு உரியதாக மச்சாவதாரத்தைக் கொள்பவர்களும், ஏராளமாக உள்ளனர். ஆண்டவன் மீனாவானேன்—இதென்ன கேலிக்கூத்து, என்று கூறினாலோ, இங்கு பக்தர்களின் முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கும், “ஏடா! மூடா! எம்பெருமானின் தசாவதாரத்திலே ஒன்று மச்சாவதாரம் என்பதையும், மகா மகத்துவம் வாய்ந்தது என்பதையும், நாலு வேதங்களையும் ரட்சிக்கவே மச்சாவதாரம் எடுத்தார், துளசி