198
மாஜி கடவுள்கள்
கிய பொருள் என்று தூக்கி எறிந்துவிட்டது—பாரத் வர்ஷமோ, இன்றும், தன் மச்சாவதாரத்தை மறக்க மறுக்கிறது. பாபிலோனியாவில், மச்சாவதாரம், மாஜி கடவுளாகிவிட்டது—இங்கோ, மீன் இலாக்காவைப் பற்றிப் பேசும் அமைச்சர், முதலில், மச்சாவதார மான்மியத்தைப் பற்றிய புராணமல்லவா பேசுகிறார்!
எந்த நாட்டிலேயும், தெளிவு பிறக்காத காலத்திலே, கடவுள் கூட்டம், இதுபோலத்தான், இருந்து வந்தது!
இங்கு, புராணிகன் கூறுகிறான் இந்திரன், மாறுவான் அடிக்கடி. அதாவது புண்ய பலனாக யார் வேண்டுமானாலும் இந்திரன் ஆகலாம், அவ்விதம் பல இந்திரன்கள் ஏற்பட்டனர்—ஆனால், இந்திரன் பலர் மாறி மாறித் தோன்றினாலும், இந்திராணி மட்டும், ஒரே அம்மைதான்—அதாவது, கலெக்டர் மாறுவார், இப்போது புன்னைவனநாதர் இருக்கிறார், சென்றமாதம் புவனகிரி முதலியார் இருந்தார், அதற்கு முன்பு அப்துல் லத்தீப் இருந்தார், இப்படி கலெக்டர்கள் பலர் மாறிமாறி வந்தனர். என்றபோதிலும், கலெக்டர் ஆபீஸ் நாற்காலி, முன்பு இருந்ததுதான். இப்போதும், கலெக்டர் லத்தீப் உட்கார்ந்து வேலை பார்த்த அதே நாற்காலியில்தான் புன்னைவனநாதர் இப்போது உட்கார்ந்திருக்கிறார் என்பதுபோல—இந்திரன் ஆக யார் வந்தாலும், அவனுக்கு மனைவியாக இருக்கும் திருப்பணி புரிய ஒரே ஒரு இந்திராணிதான்! இதேபோலப் பாபிலோனியாவில், ஆண் கடவுள்கள் ஆண்டுதோறும் கூட இறந்துபடுவதுண்டு—ஆனால் பெண் தெய்வங்கள், இறவா வரம் பெற்றவை! என்று புராணம் கூறுகிறது. கடவுள் ஒன்று, என்பது இன்றுள்ள அறிவு! கடவுள் பல, அன்று இருந்த எண்ணம், ஏற்பாடு அவ்விதம்! கடவுள் பல என்பது மட்டுமல்ல, ஆண் கடவுள் பெண்