உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மாஜி கடவுள்கள்


குத்திக் கொள்பவன் பித்தன்தானே! பட்டாடை அணிந்து, அதன்மேல், மரப் பட்டையையும் அணிபவரை, என்னென்று கூறுவது. ஆண்டவன் அருளின் இருப்பிடம், அன்பின் பிறப்பிடம், ஒருவனே தேவன், என்ற, உண்மை நெறியையும் பேசிக்கொண்டு, மச்சம், வராகம், கூர்மம், ஆகியவைகளையும் விடமுடியாது, என்று பிடிவாதம் பேசுபவர்களை, உண்மை ஆத்தீகர் என்று எப்படிக் கூறமுடியும்! மற்ற நாடுகளிலே ஆபாசமும் அர்த்தமற்ற தன்மையும் கொண்ட கற்பனைக் கடவுள்கள் மாஜிகளாகிவிட்டனர். அங்ஙனம் மாஜியான கடவுள்களிலே ஒன்றுதான், பாபிலோன் நாட்டு மச்சாவதாரம்!!