உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துகிலுரிந்த துச்சாதனி

203


வாயில்காப்போன் வந்தான், வனிதையைக் கண்டான், ஆனால் கதவைத் திறக்கவில்லை. ஓடிச் சென்று ‘சேதியை’ தன், எஜமானியிடம் கூறினான்.

🞸🞸🞸

“எழிலுருவோ அவள்?”

“ஆம்! அழகின் எல்லை”

“அலறித் துடித்து அழுகிறாளோ அவள்?”

“ஆமாம், கல்லும் கரையும் அக்கன்னியின் அழுகுரல் கேட்டால்”

“கதவுதிறமின் என்று கேட்டு நிற்கிறாளா?”

“ஆம்! திறவாது போனால், உடைத்தெறிவேன் என்று சூள் உரைக்கிறாள் அந்த வாட்கண்ணி!”

“சூள் உரைத்தவளை, இந்நாள் என்ன செய்கிறேன் பார். காவலா! கதவு திறவாதே!”

“கதறுகிறாளே!”

“அது எனக்குக் கீதம்!”

“கதறுவதை நிறுத்திக்கொண்டு கதவை உடைக்க முனைந்தால்?”

“ஆமாம்! அதுபோலும் செய்யக்கூடும், அந்த ஆட்கொல்லி. ஒன்று செய். கதவு திறந்து அவளை இங்கு அழைத்துவா. ஆனால், இங்கு, வழக்கமாக நாம் நடத்தும் மரியாதை முறைப்படி! துஷ்டச்சிறுக்கி உணரட்டும், நமது துரைத்தனத்தின் பெருமையை—ஆற்றலை அறியட்டும், அலைமோதும் மனம் கொண்ட அந்த அணங்கு”

🞸🞸🞸

காவலனும், எஜமானியும், பேசினர் இதுபோல். கதவைத் திறந்து, கதறி நின்ற காரிகையை, அந்தப் பிரம்-