204
மாஜி கடவுள்கள்
மாண்டமான மாளிகைக்குள் அழைத்து வந்தான் காவலன். மையிருட்டு! பலவிதமான பறவைகள் அங்கு சிறகடித்து வட்டமிட்டுக்கொண்டிருந்தன. செவியைச் சிதைக்கும் விதமான கோரச் சத்தங்கள். எங்கும் புழுதி! துர்நாற்றம்! இந்த இடத்திலே, அழைத்துச் செல்லப்படுகிறாள், எழிலரசி. இவ்வளவையும் பொருட்படுத்தாமலே அவள் செல்கிறாள், இருதயநாதன், அங்கு இருக்கிறான், காண்போம், பெறுவோம் என்ற நம்பிக்கையுடன்.
வழக்கமான மரியாதையுடன் அழைத்து வா, என்று கட்டளையிட்டிருந்தாலல்லவா, காவலனுக்கு. அவன் மீறி நடக்கமுடியாது. எனவே அரசி கூறியபடியே, அழகிக்கு மரியாதைகள் நடத்தினான்.
என்ன அந்த மரியாதை?
முதற் வாயிற்படி புகுந்ததும், அழகியின், கிரீடம் பறிக்கப்பட்டது. இரண்டாம் வாசலில், காதணி போயிற்று, மூன்றாம் வாசலில் கழுத்தணி போயிற்று, நான்காம் வாயலில் நகை பல போயின, ஐந்தாம் வாயலில் இடுப்பணி பறித்தனர்—இவ்வளவுக்கும் அவள் சினம் கொள்ளவில்லை, இந்தச் சீரழிவுகள் ஏன் என்று வருந்தவுமில்லை, ‘செல்! செல்! என் காதலன் இருக்குமிடம் அழைத்துச் செல்!’ என்றே கூவினாள். ஆறாம் வாயலில் அந்த ஆரணங்கின் ஆடையும் பறிக்கப்பட்டது; தோகையின் துகிலுரியப்பட்டது. ‘ஏனோ இச்செயல்?’ என்று கேட்டாள். ‘என்செய்வேன் ஏந்திழையே! எமது அரசி அலாட்டூவின் ஆக்கினை இது’ என்றான் காவலன்.
இழுத்துச் செல்லப்பட்டாள், மேலும் மேலும்—நெடுந்தூரம் கடைசியில் ஓர் கொலுமண்டபத்தின் முன்பு நிறுத்தப்பட்டாள். அங்கு வீற்றிருந்தாள், அலாட்டூ