உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துகிலுரிந்த துச்சாதனி

205


அரசி. கெம்பீரமாக அவள் எதிரே நின்றாள், ஆடையிழந்த அழகி!

“பங்கம் பல அடைந்தும் இவள் பெண் சிங்கமென நிற்பதைக் காணீர்!” என்று சுடுசொல் கூறினாள், அலாட்டூ அரசி.

“இவளை இவ்வளவு இம்சித்தது போதாது! காதலன் அல்லவா வேண்டும், காதலன்! தருகிறேன், இவளுக்குக் கடுமையான நோய்கள் அனைத்தையும்” என்று ஆர்ப்பரித்தாள்.

நாம்டார், எனும் நோயூட்டும் தீயதேவனை அழைத்தாள்—இவளைத் தீண்டு, தேவனே! தேகமெங்கும், நோயை மூட்டிவிடு; என்று உத்தரவிட்டாள். நாம்டாரின் நாசமூட்டும் சக்தி, நங்கையின் உடலெங்கும் நோயை ஊட்டிற்று. அழகி, அழுகலானாள்.

ஆனால், அவளுக்கு வந்த அவதி, அவளோடு நின்றதோ! இல்லை! அவனியெங்கும் பரவிற்று. உற்பத்தியே நின்றுவிட்டது.

🞸🞸🞸

எவ்வளவு எக்களிப்புக் கொள்வர், இவ்வளவு ‘கதை’ கிடைத்துவிட்டால்! வாயலுக்கு வாயல், அழகி செல்ல எவ்வளவு நேரம் பிடித்திருக்குமோ, அதுபோல் நூறு மடங்கு அதிக நேரம் பிடித்திருக்குமே, அருங்கவிவாணர்களுக்கு. ‘கவிச் சக்ரவர்த்தி’ கம்பரிடம், மட்டும், இந்தக் காரிகையின் கதை சிக்கிவிட்டிருந்தால், அந்த ஆறாம் வாயற்படியைக் கடக்க, எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்! ஒரு நூறு செய்யுள் செய்து, ‘அம்மவோ! அற்புதங்கொல்! காணற்கரிய காட்சியாமே!’ என்ற செருகல்களை வைத்து, இன்ப ரசத்தை இழைத்துக் குழைத்து, அரி அரப் பிரம்-