உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மாஜி கடவுள்கள்


தது, பிறகு ஊரிலே பாதிப் பகுதியினர் பகுத்தறிவின் பக்கம் சேர்ந்தனர். யாருக்கு வெற்றி? பழமை திரட்டிவைத்திருந்த பட்டாளத்திலே ஒரு பகுதி, படைபலமின்றி இருந்த பகுத்தறிவுக்குக் கிடைத்துவிட்டது.

டையகோராஸ் போலவே, சாக்ரட்டீசும், கிரேக்க மக்கள் கண்மூடித்தனமாக கும்பிட்டுக் கூத்தாடிவந்த கடவுட் கூத்தைத்தான் கண்டித்தார். சாக்ரட்டீஸ்மீது சாட்டப்பட்ட குற்றம், “கிரேக்கர்கள் தொழுதுவந்த தேவர்களைப் பொய்த் தெய்வங்களென்று சொல்லி வாலிபர்களைக் கெடுத்தார்” என்பதுதான்.

“இதற்குமுன் எவ்வளவோ உத்தமர்களை ஊர் மக்கள் கோபத்தாலும் அறியாமையாலும் வதைத்துள்ளனர். நானும் பாமரரின் கோபத்துக்குப் பலியாகிறேன். எனக்குப் பிறகும், பலர் பலியாகித் தீருவார்கள்” என்று சாக்ரட்டீஸ் சொன்னார். அவர் இறந்தபோது, பகுத்தறிவு முன்பு இருந்ததைவிட அதிக வலுவடைந்தது. ஊராரின் உள்ளம் அடியோடு மாறிவிடவில்லை என்ற போதிலும், உயிர்போகுமே என்ற பயத்துக்காகப் பகுத்தறிவாளர்கள், தமது பணியை நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. தியாகிகளின் இரத்தமே, அதற்கு நீராகப் பாய்ச்சப்பட்டது. அறிவுத் துறைக்கு இந்த ‘அபிஷேகம்’ நடத்த நடத்த, ஆதிநாட்களிலே அமைக்கப்பட்டு, ஆலயங்களிலே கொலுவீற்றிருந்து, பூஜாரிகளைக் கொழுக்க வைத்துக்கொண்டிருந்த “சாமி”களுக்கு நடக்கும் “அபிஷேகம்” குறையத் தொடங்கிற்று. கடவுளின் லீலைகளைப்பற்றிய பேச்சிலே ஈடுபட்டிருந்த மக்கள், பகுத்தறிவாளர்கள் இரத்தம் சிந்திய வரலாறுகளைப் பேசத்தொடங்கினர். அந்தப் பேச்சு ஓங்க ஓங்க, தேவாலயப்பூஜாரிகள் தூங்க ஆரம்பித்தனர். அவர்கள், தங்கள் சாமிகள் சகலரையும் ஒரேயடியாகத் துணைக்கு அழைத்-