206
மாஜி கடவுள்கள்
மாதியரே வந்து தடுப்பினும், இன்னுமோர் இருபது செய்யுளேனும் இயற்றாது விடின், இம்மை மறுமை இரண்டிலும் சுகம் இராது என்று கூறியிருந்திருப்பார். நல்ல வேளை, அந்த ஆடையிழந்த அணங்கு, கம்பரின் கருத்திலே தோன்றவில்லை.
🞸🞸🞸
இந்தக் கதையைத் தொடருமுன்பு, நண்பர்கள் யோசிக்க வேண்டும், சாவித்திரி, துரோபதை, எனும் இரு கற்பனைகளின், ‘கூட்டு’ போல, இக்கதை இருக்கிறதல்லவா, என்பதை.
🞸🞸🞸🞸
நாதனைச் தேடிச்சென்ற நல்லாளுக்கு இப்பொல்லா நிலை வந்தது கண்டு, நானிலம் நடுங்கியது மட்டுமல்ல, கடவுளர்களும், கோபித்தனர்.
ஏனெனில், இவ்வளவு இம்சைக்கும் இழிவுக்கும் ஆளான ஆரணங்கு, வேறு யாரும் அல்ல, தேவலோகத்தின் ராணி!—பல கடவுள்களில் ஒருவள்!!
தேவலோக ராணிக்குத்தான் காதல் இப்படி! அவள்தான், காதலனைத் தேடி அலைகிறாள் பல இடங்களிலும். கடைசியில் அவள் சென்ற இடம், நரகலோகம். அந்த நரகலோக ராணிதான், அலாட்டூ. அவள்தான், தேவலோக ராணியைத் துகிலுரிந்துவிட்டதுடன், நோயையும் ஏவுகிறாள். ஏன்? தேவலோக ராணிமீது நரகலோக ராணிக்கு அவ்வளவு பொறாமை—கோபம்!
வஞ்சம் தீர்த்துக்கொண்டாள் இஷ்டார் எனும் பெயர் கொண்ட தேவலோக ராணிமீது.