துகிலுரிந்த துச்சாதனி
207
பிறகு, இந்த அக்ரமத்தைப் பெரிய கடவுள்கள் அடக்கியதுடன், தேவலோக ராணியை நரகலோகத்திலிருந்து மீட்டனர்.
🞸🞸🞸
இந்தக் கற்பனை, எள்ளளவேனும், மட்டமா, நம் நாட்டுப் பழம் புராணங்கட்கு? எவர் கூறுவர்? இந்தப் புராணத்திலே, நமது கலாரசிகர்கள் தேடிடும் ‘நவரசம்’ ஏராளம். இதுவும் கடவுளின் கதைதான்—நரர் கதை அல்ல.
பாபிலோனியா நாட்டுப் புராணம் இது. தேவலோக ராணி இஷ்டார், டாமூஜ் எனும் திவ்ய ரூபனிடம் காதல் கொண்டு, அவனை அடைய நாகலோகம் சென்று, அங்கு, வஞ்சனை மிக்க அலாட்டூ தேவதையால் அவமானப்படுத்தப்பட்டு, நோயூட்டப்பட்டு, நொந்து கிடக்க, இஷ்டாரை ரட்சித்து, அவளை, மூல தெய்வங்கள், மீட்ட புராணம்.
இஷ்டார், அலாட்டூ, டாமூஜ், இவை யாவும் காவிய பாத்திரங்களாகமட்டும் இல்லை, கடவுள்கள்! கோயில் கட்டிக் கும்பிட்டு வந்தனர், பாபிலோனியா நாட்டு மக்கள். பூஜைகளுக்கும், புனிதத்தன்மைக்கும் குறைவு கிடையாது. இப்போது, இஷ்டாரும் இல்லை, டாமூஜும் இல்லை, இடர் செய்த அலாட்டூவும் இல்லை. இவர்களுக்காக எழுப்பப்பட்ட கோயில்களும் இல்லை, இவர்கள் பற்றிய பண்டிகை இல்லை, தேரும் திருவிழாவும் இல்லை, திருப்பாசுரம் இல்லை,—இவை யாவும் மாஜிகளாயின!! இவை போன்ற கற்பனைக் கடவுள்களை நம்பிக் கருத்தழியாதீர், என்று அறிஞர்கள் கூறினபோது, பாபிலோனிய மக்கள் எளிதிலே நம்பினரா? நம்புவரா? எங்கள் மூதாதையரின் தெய்வங்களைப், புராண மகிமையைப், பூஜையின் புனிதத் தன்மையைக் குறை கூறுகிறாயே, ஏடா! மூடா! இது நீ நாசமாவாயடா! என்றுதான் சபித்தனர். ஆனால் அவர்-