துகிலுரிந்த துச்சாதனி
209
ஏன்? கற்பனைகளைக் கண்டிப்பதை, கடவுள் உணர்ச்சியைக் கண்டிக்கும் கயமை என்று தவறாக எண்ணிக்கொண்டு அன்பர் பலர், காய்கின்றனர். இது அவசியமா என்று கேட்கின்றனர். கடவுள்மீது ஏனோ நமக்குக் கசப்பு, எனவேதான், இதுபோல் எழுதிவருகிறோம் என்றும் எண்ணினர். இவ்வளவும், தவறான கருத்தின்மீது கட்டப்பட்ட அவசியமற்ற அபவாதங்கள்.
உலகிலே, எத்தனையோ நாடுகளிள் எண்ணற்ற கடவுள்களை, வழிபாட்டுக்குரியனவாகக் கொண்டு, பற்பலவகை விழாக்களை நடத்தியும் வெறியாட்டத்தில் ஈடுபட்டும், வந்தனர். அவர்கள் அவ்வளவு பேரும், ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவும், முறை மாறினால் அழிவு நேரிடும், இவ்வுலகில் மட்டுமல்ல, மேல் உலகிலும் என்று அஞ்சியே, சிற்சில சமயங்களிலே, தாம் கொண்ட நம்பிக்கைகள் சரியல்லவோ, என்ற சந்தேகம் மனதிலே கிளம்பிய உடனே ‘சந்தேகச் சாத்தானை விரட்டிச் சற்குருவின் பாதத்தை நாடு’ என்ற போக்கு கொண்டனர். ஆனால் அவர்களின் அச்சத்தையும் ஆவலையும், சின்னாபின்னப்படுத்துமளவு வேகத்துடன், புத்தறிவு தாக்கலாயிற்று. பிடிவாதமாகவும், பயங்கரமான கருவிகளைத் தூக்கிப் போரிட்டும், பழைமை தோற்றுத்தான் போயிற்று. தோல்வி அடையுமுன்போ, தோத்திரம், மந்திரம், மணி மாலை, மண்டைஓடு, சுடலை மண், முதலிய எதை எதையோ காட்டி மிரட்டிக்கொண்டிருந்தது.
புத்தறிவின் ஒளிமுன்பு, பழையகாலக் கற்பனையிலே உருவான பல ‘தேவதைகள்’ இருக்குமிடம் தெரியாமல் மறைந்தன. இன்று, அந்த நாடுகளிலே உள்ள இளைஞர்களுக்கு மட்டுமல்ல, முதியோர்களுக்குங்கூட, பழைய தெய்வங்களின் பெயரும் தெரியாது. ஒரு காலத்தில் பராக்கிரம்-
14