இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
துகிலுரிந்த துச்சாதனி
211
உலகிலே பல்வேறு இடங்களிலே, அந்தந்த நாட்டு மக்கள் கொண்டிருந்தனர்—கோல் கொண்டோரெல்லாம் குப்புற வீழ்ந்து வணங்கினர் அவற்றின் முன்பு. ஆனால், புத்தறிவு பிறந்ததும், அவைகளின் ஆதிக்கம் போயவிட்டது–மெய்ஞ்ஞானம் உதித்தது; ஏறிச்செல்ல வாகனமும், வாரி அணைக்க மனைவியரும், இல்லாத ஏகதெய்வக் கொள்கை நிலைநாட்டப்பட்டது என்பதை விளக்குவது அவசியம் என்று எண்ணுகிறோம். இங்கு முன்பு இருந்த, கவிவாணர்கள், கற்பனையில் தேறினவர்கள், மனவளம் கொண்டிருந்த அளவிலும் வகையிலும், உலகில் வேறு எங்கும், எவரும் கொண்டிருந்ததில்லை என்ற பொய்யுரையையும், இந்த விளக்கம், பொடியாக்கிவிடும் என்பது நமது நம்பிக்கை.
❖