இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
- ஈஜிப்ட் நாட்டவரின் பூஜைக்குரிய தெய்வங்களிலே, முழுமுதற் கடவுளாகக் கருதப்படுபவன், ரா தேவன்—ஏறத்தாழ, நம் நாட்டுப் புராணத்திலே காட்டப்படும் சூரியன் போன்றவன், ரா!......ரா தேவன், முட்டையிலிருந்து கிளம்புகிறான், ஒளி வண்ணனாக! அந்த முட்டையோ, கடலிலிருந்து கிளம்பிற்று! அந்தக் கடல்?—யாரும் கேட்கவில்லை—கேட்பது நாத்தீகம் என்று கூறினர், ஈஜிப்ட் நாட்டுப் பூஜாரிகள். பகுத்தறிவுப் பலகணி திறக்கப்படும் வரையில ஈஜிப்ட் நாட்டு மக்கள் பிரபஞ்ச உற்பத்திக்கு, இந்தக் கடலிட்ட முட்டையே காரணம் என்று நம்பிவந்தனர்.
தவளைமுகத் தேவி
ஈஜிப்ட் பிரபஞ்ச உற்பத்தி
கடலும் காற்றும், வானமும் அங்கு மின்னும் விண்மீன்களும், கதிரவனும் திங்களும், இடியும் மின்னலும், பெருமழையும், அறிவுவளம் பெறாமல் மனிதகுலம் வாழ்ந்த நாட்களிலே, விளங்காதவைகளாக, விசித்திரமானவைகளாக இருந்தன. கண்முன் உள்ள காட்சிகள்—ஆனால் பொருள் விளங்கவில்லை—நிகழ்ச்சிகளுக்குக் காரணம்