214
மாஜி கடவுள்கள்
யாருடைய ஏற்பாடு இவைகள்?—எண்ணுகிறான் எண்ணுகிறான்—திகைக்கிறான் விளங்காமல்!
எதிலிருந்து எது உண்டாயிற்று! ஏன் உண்டாயின!—மனம் குழம்புகிறது இதைப்பற்றி எண்ணத் தொடங்கினால்.
காற்று மகா சக்தி வாய்ந்தது—ஆமாம்—பெருமரங்களைப் பெயர்த்தெடுத்தல்லவா வீசுகிறது, செண்டு போல!—
கடல்! காற்றைவிட விசித்திரமானது!
விண்! எல்லாவற்றையும்விட விசித்திரம்!
சூரியன்!—மிகமிக மேலான சக்தி படைத்தது!
இவ்விதம், ஒவ்வொரு இயற்கைப் பொருளும், மனிதனுக்கு, ஆச்சரிய மூட்டுகிறது. எதற்கும், அவனால் விளக்கம் காணமுடியவில்லை.
அந்த நிலை, பொதுவாக மனித குலத்துக்கு இருந்தபோது, ஒரு சிலர், புரியாத பிரச்னைகளைப்பற்றி, விடாமல் சிந்தித்து, தத்தமது திறமைக்கேற்ப, விளக்கம் கண்டு கூறினர். அப்படிக் கூறப்பட்டவைகளே, விசித்திரமான கதைகள்! இவைகளைப் புரட்டர்களும், பூசாரிக் கூட்டத்தாரும் பாமரரை ஏய்த்துப் பிழைக்கவும், தமது ஆதிக்கத்தைப் புகுத்தவும் பயன்படுத்திக்கொண்டனர்.
புரியாத பிரச்னைகளுக்குக் கற்பனையாகக் கட்டிவிடப்பட்ட கதைகள் பலப்பல, எனினும், அவை பெரிதும், பிரபஞ்ச உற்பத்தி பற்றியும். இறந்தபின் மனித நிலை என்ன என்பது பற்றியதுமாகவே இருந்திடக் காணலாம். அதாவது பொதுவாக இந்தக் கற்பனைக் கதைகள், கடந்துபோன காலம், எதிர்காலம், எனும் இரு முனைகள் பற்றியதாகவே இருந்தன.