தவளைமுகத் தேவி
215
பிரபஞ்ச உற்பத்திபற்றி ஒவ்வொரு நாட்டவர் ஒவ்வொரு விதமான ‘கதை’ கூறிவந்தனர். அதுபோலவே, ஈஜிப்ட் நாட்டிலேயும் ஒரு கற்பனை நெடுங்காலம் வரையிலே, மக்கள் மனதை ஆட்சி செய்துவந்தது.
கொந்தளிக்கும் பெருங்கடல்! அதன் ஆழம், பரப்பு, யாருமறியார்! அதன் போக்கு, யாருக்கும் விளங்காதது! அந்தப் பெருங்கடல்தான், வித்து! விண்ணோ மண்ணோ, புல்லோ பூண்டோ, மோட்சமோ நரகமோ, தேவனோ அசுரனோ, ஏதும் தோன்றாதிருந்தபோது, பெருங்கடல் ஒன்றுதான் இருந்தது—கொந்தளித்தபடி!
அந்தப் பெருங்கடலிலிருந்து, ஒரு பளபளப்பான முட்டை கிளம்பி மிதந்தது. அதிலிருந்துதான் கிளம்பினான், முதற் கடவுள், ரா தேவன்!
ஈஜிப்ட் நாட்டவரின் பூஜைக்குரிய தெய்வங்களிலே முழுமுதற் கடவுளாகக் கருதப்படுபவன், ரா தேவன்—ஏறத்தாழ, நம்நாட்டுப் புராணத்திலே காட்டப்படும் சூரியன் போன்றவன, ரா!
ரா தேவன், முட்டையிலிருந்து கிளம்புகிறான், ஒளி வண்ணனாக! அந்த முட்டையோ, கடலிலிருந்து கிளம்பிற்று! அந்தக் கடல்?—யாரும் கேட்கவில்லை—கேட்பது நாத்தீகம் என்று கூறினர், ஈஜிப்ட் நாட்டுப் பூஜாரிகள். பகுத்தறிவுப் பலகணி திறக்கப்படும் வரையில், ஈஜிப்ட் நாட்டு மக்கள் பிரபஞ்ச உற்பத்திக்கு, இந்தக் கடலிட்ட முட்டையே காரணம் என்று நம்பி வந்தனர்!
ரா தேவன் பிறந்த கடலகம், நூ என்று அழைக்கப்பட்டது, அன்றைய மக்களால்!
ரா தேவனுக்கே, மூன்று திருநாமங்கள். பொற்கதிர் பரப்பிக் கிளம்பிடும் அதிகாலையில், கெப்பீரா என்று