மாஜி கடவுள்கள்
9
துப் போரிடவேண்டிய நிலைமையை ஏசு உண்டாக்கினார்; அவர்களைக் கொன்று அல்ல; தான் சிலுவையில் அறையப்பட்டு. ஏசுவைச் சிலுவையில் அறைந்தது, சாக்ரட்டீஸ் விஷம் குடித்து 500 வருஷங்களான பிறகு! சிலுவையில் அறையப்பட்டவர் ஏசு, ஆனால் உயிர் நீத்தது யார்? பழைய சாமிகள்! பல காலமாகப் பாமரரை ஆட்டிப்படைத்த “கடவுட் கூட்டம்”
சிற்பிகளின் சிருஷ்டிகளான கோயில்களிலே, கோலாகலமாக வீற்றிருந்த எண்ணற்ற குட்டித் தெய்வங்கள் மக்களால் மறக்கப்பட்டு மாஜிகளாயின.
பல காலமாகப் பெற்றுவந்த பூஜைகள், பலிகள் நின்றுபோயின. பரம்பரை பரம்பரையாக இருந்துவந்த பூஜாரிக் கூட்டம், வேலை இழக்க நேரிட்டது.
“எங்கள், சாமிகளையா இப்படி எல்லாம் தூற்றுகிறாய்? பாவி! எவ்வளவு அருமையான தெய்வங்களடா அவை! அவைகளின் சக்தி உனக்கென்னடா தெரியும், மூடா! அந்தச் சாமிகளைப்பற்றி எவ்வளவு அழகான பாசுரங்கள் உள்ளன தெரியுமா? கலைப் பொக்கிஷமல்லவா, கடவுள் சம்பந்தமான காவியங்கள்? சிற்பிகளின் சிருஷ்டி அல்லவா கோயில்கள்! இவைகளையா பழிப்பது? அதர்மக்காரா!” என்று தூற்றி, டையகோராசை ஊரைவிட்டு ஓடும்படி செய்தது போலவும், சாக்ரட்டீசைச் சாகடித்தது போலவும், அறிவு பரப்பத் துணிந்தவர்களை அழித்தனர், அறிவுத் தெளிவு இல்லாததால் ஆத்திரம் கொண்ட மக்கள். ஆனால் பலன் என்ன? எந்தச் சாமிகளின் சார்பிலே, அந்த மக்கள், அறிஞர்களை அழிக்கத் துணிந்தனரோ, அந்தச் சாமிகள் இன்று இல்லை!! அத்தனை கடவுள்களும்-பண்டைய நாட்களிலே பாபிலோன், கிரீஸ், ரோம், எகிப்து, சீனா போன்ற பல நாடுகளிலே, கோடிக்கணக்கான மக்களால் கும்பிடப்பட்டுவந்த கோலாகலமான கடவுள்களும்