216
மாஜி கடவுள்கள்
பெயர்! பகலில், ரா தேவன் என்று பெயர். மாலையிலே டும் என்று நாமதேயம்.
ரா தேவனைத்தான், ஈஜிப்ட் மக்கள், தேவதேவனென்றும், முழுமுதற் கடவுள் என்றும், கொண்டாடி வந்தனர்—பலப்பல நூற்றாண்டுகள்! இங்குபோலவே அங்கும்! ஆலயங்கள், பூஜாரிகள், திருவிழாக்கள், பூஜைகள், கோலாகலத்துக்குக் குறைவில்லை.
எல்லாக் கடவுள்களும் ரா தேவனால் படைக்கப்பட்டார்கள், என்று ஈஜிப்ட் புராணம் கூறுகிறது.
காற்றுக் கடவுள் ஷு (வாயு தேவன்) சிங்கமுகவதி டெப்னட் தேவி, மாநிலக் கடவுள் செப், விண்ணகக் கடவுள் நட்—போன்ற பல கடவுள்களையும் ரா தேவனே, உண்டாக்கினான். ரா தேவனால் படைக்கப்பட்ட நட் கடவுளிடம் பிறந்தவர்கள் நால்வர், இரண்டு ஆண் கடவுள்கள், இரண்டு பெண் கடவுள்கள். ஆசரிஸ் தேவன், இசிஸ் தேவி! செட் தேவன், நெப்தீஸ் தேவி!
விண்ணையும் மண்ணையும், ரா தேவன்தான் படைத்தான்—ரா தேவன் கட்டளையால், கடலகத்திலிருந்து கிளம்பின இரண்டும்.
ரா தேவன் தன் கண்களிலிருந்து, மாந்தரைப் படைத்தான்! பிரமன் முகத்திலே பிராமணன் உதித்தான்—என்று இங்கு புராணம் இருக்கிறதல்லவா—அங்கு, ஈஜிப்ட்டில், ரா தேவனின் கண்ணிலிருந்து மனிதர் பிறந்தனர் என்று புராணம் இருந்தது!
ஈஜிப்ட்டில், இருந்தது—இங்கு, இருக்கிறது! ஈஜிப்ட்டில், அறிவு ஆட்சி செய்யத் தொடங்கியதும், முழுமுதற் கடவுளாவது முட்டை வடிவிலே வெளிப்படுவதாவது,