தவளைமுகத் தேவி
217
ஒரு கடவுள் பல கடவுள்களைப் பெறுவதாவது, இதெல்லாம் கட்டுக் கதைகள், என்று மக்கள் கூறிடும் துணிவும் தெளிவும் பெற்று, கடவுள் ஒருவர், உருவமற்றவர் என்ற மெய்ஞானம் பெற்றனர்—மேதினியில் வேறு பல நாடுகள் மெய்யறிவு பெற்றது போலவே. இங்குதான், அன்று போலவே இன்றும், அரிதுயில் செய்யும் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, அவருடைய நாபிக்கமலத்திலே இருந்து தாமரைக்கொடி, அதன் நுனியிலே தாமரை, தாமரை மீது நான்முகப் பிரம்மா, அவர் நாவிலே கல்விக்கரசி சரசுவதி-என்பன போன்ற கதைகள், ஆதிக்கம் செலுத்துகின்றன—மறுப்பவன் மாபாவியாகிறான்!
கதையை அப்படியே நம்பிடும் ஏமாளி ஒருபுறம்.
கதைக்குக் தத்துவார்த்தம் கூறிடும் தந்திரக்காரன் மற்றோர் புறம்.
கதையிலே புதைந்து கிடக்கும் உண்மைகளைக் கண்டறிந்து கூறிடும் அறிவியல் துறையின் கழைக் கூத்தாடிகள் மற்றோர் புறம்.
கதைகளை நம்புவதுதான் ஆத்தீகம், காரணம் கேட்பவன் நாத்தீகன், என்று மிரட்டிடும் பூஜாரிக் கூட்டம் மற்றோர் புறம்—என்று இந்நிலையில் இங்கு மக்கள் உள்ளனர். ஈஜிப்ட்டில் இதே நிலையில் இருந்த மக்கள், இப்போது, கடலில் கிளம்பிய முட்டையே கதிரவன்—கதிரவன் பெற்ற குழந்தை குட்டிகளே, பல கடவுள்கள், என்ற பழங்காலக் கதைகளை, குப்பை மேட்டுக்கு அனுப்பிவிட்டனர்—அறிவு பெற்றதும்!
அறிவாராய்ச்சி இல்லாதபோது இருந்த இறைவன்தான் ரா. அவனுடைய ஆற்றலைப் புகழ்ந்தனர், புராணப் புலவர்கள்! அவன் அழகைக் காவியத்திலும் ஓவியத்-