உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவளைமுகத் தேவி

219


இசிஸ் ஒரு கடவுளா! எப்படி அந்த நாட்டு மக்களின் மனம் இடம் கொடுத்தது, இசிசைப் பூஜிக்க—என்று கேட்கத் தோன்றும்.—இப்போது அப்போதோ, இவைகளைக் திருக்கலியாண குணங்களாகவே கொண்டாடினர் மன மயக்கத்தால்,

ரா தேவன், சர்வ வல்லமையுள்ளவனாக இருந்ததற்குக் காரணம், அவனுடைய இதயத்திலே ஒரு மந்திரப் பெயர் பதிந்திருந்ததுதான்! அந்த மந்திரப் பெயர் வேறு ஒருவருக்கும் தெரியாது. அதுமட்டும் தெரிந்துவிட்டால் போதும், தானும் ரா தேவன் போலவே சர்வ சக்தி படைத்த கடவுளாகிவிடலாம், என்று கருதினாள் இசிஸ் தேவி. தக்க சமயத்தை எதிர்பார்த்த வண்ணம் இருந்தாள் தேவி.

ரா தேவன், தள்ளாடி நடக்கும் கிழப் பருவமடைந்துவிட்டான். ஈளை இருமல் மேலிட்டுவிட்டது! வாயிலிருந்து தானாக, உமிழ் நீர் கீழே ஒழுகலாயிற்று. நரையும் திரையும் மேலிட்ட மூப்புப் பருவம் மேலிட்டது, முழுமுதற் கடவுளுக்கு. கடவுள் கிழவனுமாகிறார்!! கடவுட் தன்மையா இது, என்று, இன்று கேட்கத் தோன்றும், அன்று கேட்கும் துணிவு பிறக்கவில்லை, அறிவு, கருவில் இருந்த காலம் அது.

ரா தேவனுக்குச் சமமாக வல்லமை பெற எண்ணிய இசிஸ் தேவி, ரா தேவனின் உமிழ்நீர் தரையில் சிந்திடக் கண்டு, அந்த மண்ணை எடுத்து ஒரு மாயப்பாம்பு ஆக்கினாள். யார் கண்ணிலும் தெரியாத மாயப் பாம்பு! தேவ தேவனாம் ராவுக்கும் தெரியாது. அந்த மாயப் பாம்பு ரா தேவனைத் தீண்டிவிட்டது—துடிதுடித்தான் தேவன். என்னவென்று தெரியவில்லை—வேதனையோ தாளமுடியவில்லை. மரணாவஸ்தையில் இருந்த ரா தேவன், தன்