220
மாஜி கடவுள்கள்
குழந்தை குட்டிகளான கடவுள்களை எல்லாம் அருகே அழைத்துப் புலம்பியபடி, “அருமை மக்களே! என் உயிர் துடிக்கிறது. வேதனை தாங்கமுடியவில்லை—அதன் காரணமோ தெரியவில்லை. நெருப்பல்ல என்னைத் தீண்டியது, என்றாலும், தீயில் வீழ்ந்தது போலாகிவிட்டது. என் தேகம்! உடல் ஜில்லிட்டுவிட்டது! என் செய்வேன்! இனி நான் பிழைப்பது ஏது!” என்று கூறிட, எல்லாக் கடவுள்களும் கோவெனக் கதறினர்—இசிஸ் மட்டும் இரக்கம் காட்டவில்லை. மந்திரம் தெரிந்த கடவுள்கள் மந்திர உச்சாடனம் செய்தன—ரா தேவனுடைய வேதனையைப் போக்க. பலன் இல்லை. சில கடவுள்கள், மருந்திட்டன, மகேசன் பிழைக்க—பலன் காணோம். பிறகு, இசிஸ் தேவி “நான் குணப்படுத்த முடியும்” என்று கூறினாள். “அப்படியா, அருமை இசிஸ்! குணப்படுத்து, வா, வேதனை தீரட்டும்” என்று ரா தேவன் கெஞ்சினான்—மற்றத் தெய்வங்களும் மன்றாடின. இசிஸ் தேவி, “என் விருப்பத்தை ரா தேவன் நிறைவேற்றுவதாக வாக்களித்தால்தான், நான் அவருக்குக் குணம் உண்டாகச் செய்வேன்” என்று பேரம் பேசலானாள்.
முழுமுதற் கடவுளின் உயிர் துடிக்கிறது—பேராசை கொண்ட பெண் தெய்வம், பேரம் பேசுகிறது.
“என்ன தேவை உனக்கு? சொல்லம்மா, சொல்லு”—ரா, கேட்கிறார்.
“உமது இதயத்திலே பதிந்துள்ள மந்திரப் பெயர் எனக்குத் தெரியவேண்டும்”—இசிஸ் கேட்கிறாள்.
“நெஞ்சழுத்தக்காரி! யாரும் அறிய முடியாதது அந்தப் பெயர்! எவரும் அறியக்கூடாதது அந்தப் பெயர்! அது, என் இதயத்தில் இருப்பதால்தான் நான் சர்வேஸ்-