உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தவளைமுகத் தேவி

223


இப்படி எல்லாம், ஏசியும் இழித்தும் பேசினர், சில மாந்தர், மகேசனைப்பற்றி.

“ரா தேவனுக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை, அழைத்தார் கடவுள்களை. அக்ரமக்காரர் சிலர், என்னை எதிர்க்கின்றனர்; ஏளனம் பேசுகின்றனர்; என் ஆட்சியைப் பழிக்கின்றனர். இதற்கென்ன செய்யலாம், கூறுங்கள், நீங்கள் சம்மதித்தால், துடுக்குத்தனமாகப் பேசிடும் அந்தத் தீயவர்களை அழித்து விடுகிறேன்.” என்று கூறினார். அதுவே சரி என்றனர் அத்தனை கடவுளரும். உடனே, ரா தேவனின், கண், ஹாதார் எனும் தேவி வடிவம் கொண்டு, தீயோரைக் கொன்று குவித்தது. இரத்தவேட்டையில் ஈடுபட்டாள், தேவி!

“அக்ரமக்காரர் அழிந்துவிட்டனர்! ஆனால், இரத்தம் குடித்து, பழக்கப்பட்டுவிட்ட ஹாதார் தேவி, வெறி கொண்டவளாகி, மேலும் மேலும் மாந்தரைக் கொன்று குவிக்கலானாள். இதுகண்ட மகேசன் மனமிளகி, இரத்த வேட்டையாடும் ஹாதார் தேவியைத் திருப்பி அழைத்துக் கொள்ளத் திட்டமிட்டு, பார்லியும் (ஈஜிப்ட் நாட்டு உணவுப் பொருள்) இரத்தமும் கலந்து, 7000 ஜாடிகளிலே நிரப்பித் தர, அதைப் பருகிய பிறகு ஹாதார் தேவியின் உக்கிரம் அடங்கிற்று, தேவியும் பழையபடி, ரா தேவனின் கண் ஆகிவிட்டாள். அழிவுத் தேவியின் இரத்த வெறியை அடக்க அன்று ரா தேவன் தயாரித்த பானம்தான், பிறகு, பீர் என்ற பெயருடைய பானமாயிற்றாம்!

‘துஷ்ட நிக்ரஹ’த்துக்குப் பிறகு, ரா தேவன், இனியும் பூலோக மன்னனாக இருத்தல் முறையல்ல என்று தீர்மானித்து, சொர்க்கலோகத்தை உண்டாக்கிக்கொண்டு, அங்கு சென்று வசிக்கலானார்.