தவளைமுகத் தேவி
225
ஆசரிஸ் தேவனின் கதியைக் கேள்விபட்ட இசிஸ் தேவி கோவெனக் கதறி, கொடுங்கோலனாம் செட் தேவனைச் சபித்தார்—அவனோ, அவளையும் அழித்திடத் துணிந்தான். அஃதறிந்த பெண் தெய்வம், தன் புருஷனின் உடல் எந்தப் பேழையில் இருக்கிறதோ, அந்தப் பேழையைக் கண்டுபிடித்துத் தீருவது என்று உறுதி கொண்டு, நைல் நதி தீரமெல்லாம் தேடினாள். இசிஸ் அம்மைக்குத் துணையாக, தேவனருள் பெற்ற 7 தேள்கள் இருந்தன! தேவிக்குத் துணை தேள்கள்!!
நைல் நதியிலே வீசி எறியப்பட்ட பேழை, சிரியா நாட்டுக் கடலோரத்திலே அடித்துக்கொண்டு வரப்பட்டு, அங்கு ஒரு மாய மரமாகி நின்றது. மாய மரத்தின் அடிப்பாகத்துக்கு உள்ளே பேழை! பேழைக்குள்ளே ஆசரிஸ் தேவனின் உடல்!! அந்த நாட்டு மன்னன் இந்த மாய மரத்தைக் கண்டதும், ஆச்சரியப்பட்டு, அதை வெட்டிக் கொண்டு வரச்செய்து தன் அரண்மனையிலே, தூணாக அமைத்துக்கொண்டான்.
பல இடங்களிலும் தேடித் தேடி அலைகிறாள் இசிஸ் தேவி—தன் பர்த்தாவை—இந்தச் சமயத்திலேதான், ஈஜிப்ட் நாட்டு சாவித்ரிக்கு, ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது—ஹோரஸ் என்ற பெயர்! ஈஜிப்ட் நாட்டுக் கம்சன் இந்தக் குழந்தையைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறான். இது தெரிந்த தேவி, குழந்தையை பாம்பு வடிவிலே இருந்த ஒரு கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு, தன் கணவனின் உடலைக் கண்டுபிடிக்கும் காரியத்தில் ஈடுபடுகிறாள்.
கடைசியில் அசரீரி மூலம், கணவனின் உடலைக் கொண்டுள்ள பேழை இருக்குமிடம் தெரிய அந்தச் சிரியா நாட்டிலே, பைபிளாஸ் என்ற மண்டலம் செல்கிறாள். பல இன்னல்களுக்குப் பிறகு பேழை கிடைக்கிறது—ஆனால்
15