226
மாஜி கடவுள்கள்
இதைக் கண்டறிந்த பேயனாம் செட் தேவன், ஆசரிசின் உடலை 14 கூறுகளாக்கி நைல் நதியிலே வீசிடுகிறான்—ஆனால், முதலைகள் தின்ன மறுத்துவிடுகின்றன—ஒரு சிறு துண்டைமட்டும் ஒரு மீன் தின்றுவிடுகிறது. அதுபோக, மிச்சமிருந்த துண்டுகள் அவ்வளவையும், இசிஸ் தேவி கண்டுபிடித்து ஒன்று சேர்த்து, பேழையில் அடக்கம் செய்கிறாள். அதனால்தான் ஈஜிப்ட் நாட்டிலே செத்தவர்களின் உடலைக் கெடாதபடி பக்குவம் செய்து பேழையில் அடைக்கும் பழக்கம் வளர்ந்ததாம். செட் தேவனை, ஹோரஸ் வாலிபனானதும், விரட்டி அடித்துவிட்டு, தன் ஆட்சியை நிலைநாட்டுகிறான். செட் தேவன் நரகலோக அதிபதியாகிவிடுகிறான்.
இப்படிப்பட்ட ‘கதை’ கட்டப்பட்டு, மக்களால் புண்ய கதை என்று போற்றப்பட்டு, அந்தக் கதைகளிலே குறிப்பிடப்பட்ட கடவுள்களுக்கு பூஜைகள் நடந்து வந்தன ஈஜிப்ட் நாட்டில் பன்னெடுங்காலம் வரையில். கேட்டஉடன் கேலிச் சிரிப்பு பிறக்கும் கதைகள்! காலுமில்லை தலையுமில்லை என்பார்களே அப்படிப்பட்ட கதைகள்! பொருள் பொருத்தம், காரணம் ஏதும் அற்ற கதைகள்! அவையே அந்த நாளில் ஈஜிப்ட் நாட்டுத் தேவமா கதைகள்! கவிதை பாடினர் இந்தக் கடவுளரின் திருவிளையாடல் பற்றி! பிரம்மாண்டமான கோயில்களைக் கட்டினர்! எல்லாம் அறிவுத் தெளிவு பிறக்கா முன்னம். பிறகு, பகுத்தறியும் பண்பு பிறந்தது, ராவும் ஆசரிசும் இசிசும், மாஜி கடவுள்களாயின அங்கு! இங்கு அல்ல!!
மனிதன், அறிவுத் துறையிலே எவ்வளவு கஷ்டப்பட்டு முன்னேறியிருக்கிறான், எத்தகைய குருட்டறிவிலிருந்து பகுத்தறிவுக்குப் பயணம் செய்திருக்கிறான் என்ற வரலாறு அல்ல இங்கு மதிக்கப்படுவது. எந்தக்