இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தவளைமுகத் தேவி
231
பசு உருவில் தேவன், குதிரைமுகத்தில் தேவன்—நமது புராணப்படி—அவைகளை நம்பாதவனை இன்று நாத்தீகன் என்று நிந்திக்கிறோம். பாரில் பகுத்தறிவு இவ்வளவு பரவி இருப்பது தெரிந்தும். அதோ, ஈஜிப்ட்டிலே முன்னாளில், அதாவது மூடமதியினரை கபடர்கள் ஆட்டிப் படைத்தபோது கட்டப்பட்ட புராணப்படி, ஆட்டுமுகத் தேவனும், தவளைமுகத் தேவியும் கோயில்களிலே கொலுவீற்றிருந்தனர். இன்று! கை கொட்டிச் சிரிப்பார்களே, கடவுள்கள் என்று பன்மையில் பேசினாலே! அங்கு, ராவும் ஆசரிசும், இசிசும் பிறவும், மாஜிகளாகிவிட்டன, மதிவென்றதால். இங்கோ இருளாண்டிகூட மாஜியாக மறுக்கிறான்—அஞ்ஞானத்துக்கு அவ்வளவு செல்வாக்கு இங்கு இன்றும் இருக்கிறது.
❖