உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரமிழந்த கடவுள்

233


வருகிறவர்களை விரட்டுவதற்காக இந்த விசித்திரமான மூன்று நாரைகளை வேலைக்கு அமர்த்திக்கொண்டு ஒரு தேவன், கோயில் கொண்டு எழுந்தருளியிருந்தான்—எங்கே? எஸ்கிமோக்கள் வாழ் நாட்டிலே அல்ல, சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்ட நாடு என்று பெருமை பெற்ற பிரிட்டனில்—பன்னெடுங் காலத்துக்கு முன்பு-பகுத்தறிவு வெற்றி பெறாத நாட்களில்.

பிரிட்டனிலும், ஏனைய நாடுகளிலே இருந்து வந்தது போலவே பல தெய்வ வணக்கம், இருந்து வந்தது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு ‘திவ்ய சொரூபம்’ ‘திருக்கலியாண குணம்‘. திரு அருளை நாடி, அத்தனை தேவதைகளையும், பிரிட்டிஷ் மக்கள் பூஜித்து வந்தனர். கோயில்களைக் கட்டினர்—கோலாகலமான திருவிழாக்களைச் செய்தனர்—பலி பல—பூஜாமுறை விதவிதமாக!

எந்தெந்தத் தேவனுக்கு எப்படி எப்படிப் பூஜை செய்வது, எப்போது செய்வது, செய்தால் கிடைக்கும் பலன் என்ன, செய்யத் தவறினால் ஏற்படும் கதி யாது என்பதுபற்றி, விளக்கம் கூறவும், கட்டளை பிறப்பிக்கவும், பூஜைகளின்போது காணிக்கை பெறவும், பூஜாரிக் கூட்டமும் இருந்து வந்ததது.

கடவுள்களின் சக்தியை பிரிட்டிஷ் மக்கள் நோடியாகக் காணமுடிவதில்லை, ஆனால் பூஜாரிகளின் சக்தியையோ, நேரடியாகக் கண்டனர்.—கண்டு கிலி கொண்டனர்.

பழங்காலப் பிரிட்டனில் பாமரரை ஆட்டிப் படைத்த பூஜாரிகளுக்கு, ட்ரூயிட் என்று பெயர். பூஜாரியின் புன் சிரிப்பைப் பெற, பாமரர் ‘தவம்’ கிடப்பர். புருவத்தை நெறித்தால், பாமரர் தம் கதி அதோகதியாகிவிட்டது என்று எண்ணிக் குமுறுவர். ட்ரூயிட்டுகளுக்கு அவ்வளவு மகத்தான செல்வாக்கு இருந்துவந்தது. தேவர்-