234
மாஜி கடவுள்கள்
களுக்கும் மனிதருக்கும் இடையே நின்று, திரு அருளைக் கூட்டி வைக்கவோ, சாபத்தைப் பெற்றுத்தரவோ, ட்ரூயிட்டுக்களுக்கே அதிகாரம் இருக்கிறது என்று பாமரர் நம்பினர். எனவே அந்தப் பூஜாரிகளின் சொல்லை, நாடாளும் மன்னனுடைய சட்டத்தைவிட அதிக மேன்மையானதாகக் கருதிப் போற்றி வந்தனர். மன்னனுக்கு வரிகட்டத் தவறினால் ஏற்படக்கூடிய கேடு, சிறைவாசம்! ஆனால் பூஜாரிக்குக் காணிக்கை தரத் தவறிவிட்டாலோ, நரகவாசம் சம்பவிக்கும்! நரகமோ! நினைத்தாலே நெஞ்சிலே நெருப்பு! எனவே, பூஜாரிகளான ட்ரூயிட்டுகளிடம், பாமர மக்கள் அடிமையாகிக் கிடந்தனர்.
“நரபலி தந்தாக வேண்டும்—இன்ன தேவனின் கோபத்தைப் போக்க”–என்று ட்ரூயிட் கட்டளையிடுவான்—பலிபீடத்திலே மனிதன் வெட்டப்படுவான். “ஆயிரம் ஆடுகள் கேட்கிறாள் அன்னை”—என்பான் ட்ரூயிட், ஆட்டு மந்தைகளை ஓட்டிக்கொண்டு வருவர், பாமரர், ஆலயத்துக்கு!
“அந்த அழகான பெண்...?” ட்ரூயிட் கேட்பான்—“அர்ப்பணம்” என்பர் பாமரர், அடக்க ஒடுக்கமாக! ட்ரூயிட், புனிதப்பிறவி, கடவுளின் அருளைப் பெற்றவன், தேவதாம்சம்!
ட்ரூயிட், பூஜாரிமட்டுமா, அவன்தான் போதகாசிரியன், அவன்தான் சட்ட நிபுணன், சரித்திர ஆசானும் அவனே, சகல சாஸ்திரம் அறிந்துரைக்கும் பண்டிதனும் அவனே, மந்திரம் தெரிந்தவன், மருத்துவ வல்லுநன், இடிதேவன், ட்ரூயிட் கூப்பிட்டால் ஓடோடி வருவான், வானதேவனோ அவன் கேட்கும் வரமெலாம் தருவான். அவ்வளவு ஆற்றல் படைத்தவன் ட்ரூயிட், என்று பாமரர் நம்பினர், எனவே, அந்தப் பூஜாரிக் கூட்டம், பிரிட்டனில்,