உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

11


லீலைகளும், திருவிளையாடல்களும், இன்று இங்கு நம் நாட்டில் இருப்பது போலவே, அங்கெல்லாம் இருந்தன. இன்று இங்கு பகுத்தறிவு பேசப்பட்டால், பழமை கண்டிக்கப்பட்டால், கடவுள்பற்றி இப்படி எல்லாம் ஆபாசமான கதைகள் இருக்கலாமா ஆண்டவன் ஒருவன், அவன் உருவமற்றவன் என்று கூறினால், மக்கள் கோபித்து, சந்தேகித்து, பகுத்தறிவு பேசுபவர்களை நாத்திகர் என்று நிந்தித்து வதைக்கிறார்களே, அதேபோலத்தான், அங்கெல்லாம் நடந்திருக்கிறது.

அந்நாடுகளுக்கும் இந்நாட்டுக்கும் உள்ள வித்தியாசம், அங்கெல்லாம், கடவுட்கொள்கை தெளிவடைந்து பல நூற்றாண்டுகளாகிவிட்டன. இங்கு, பழைய நாட்களில் இருந்துவந்த எண்ணம் இன்றும் குறையவில்லை. வெளிநாடுகளிலே, ஒரு காலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, கோலாகலமான ஆட்சி செய்திருந்து, காவியர், ஓவியர், பூஜிதர் என்பவர்களால் போற்றப்பட்டு மகாசக்தி வாய்ந்த தெய்வங்கள் என்று புகழப்பட்டு, மணிமுடி தரித்த மன்னரையும், மத யானையை அடக்கும் மாவீரனையும் வணங்கவைத்து, அரசு செலுத்திய, எத்தனையோ ‘சாமிகள்’ இதுபோது, அந்த நாடுகளிலே மாஜி கடவுள்களாகிவிட்டன என்பதை நம் நாட்டு மக்கள் அறியவேண்டும். கோடிக்கணக்கான மக்கள் கோடிகோடியாகப் பணம் செலவிட்டுக் கோயில் சுட்டிக் கொலுவிருக்கச்செய்த கடவுளர், இன்று அங்கே மாஜிகளாயினர்! அதனால், அந்த நாடுகளில், மக்கள் கெட்டுவிடவுமில்லை, மதி தடுமாறிவிடவுமில்லை, அழிந்துபடவுமில்லை. அங்கு கலையோ, காவியமோ, சிற்பமோ, ஓவியமோ அழிந்துபோகவுமில்லை. மக்கள் நாஸ்திகர்களாகி விடவுமில்லை, அஞ்ஞானம் தொலைந்து மெய்ஞ்ஞானம் பிறந்தது. ஆலயங்கள் ஆசாபாசத்தின்