238
மாஜி கடவுள்கள்
விட்டது! அழகி வள்ளியிடம் அவர் கொஞ்சிக் கிடக்கிறார்! அடியாள் அன்ன ஆகாரமின்றி, அவதிப்படுகிறேன்! குயிலே! என் குறையை எடுத்துக் கூறி, முருகனை ஒரு முறை வந்துபோகச் சொல்லு!
இது பக்திரசப் பாடல்! இதைக் கேட்க ஒரு பெருமன்றம்!! இங்கு, இப்படி, இன்றும்.
பிரிட்டனிலும் புரட்டரின் பேச்சுக்குப் பாமரர் செவி சாய்த்திருந்தபோது, இதுபோன்ற பல கடவுள்கள், மக்கள் மனதிலே இடம்பெற்றிருந்தனர். அப்படிப்பட்ட கடவுள்களிலே ஒருவர்தான், மூன்று நாரையை மாளிகை வாயலில் நிறுத்தி வைத்து, யாரையும் உள்ளே நுழைய விடாமல் தடுத்து, ஆட்சி புரிந்துவந்த தேவன். பெயர் மைடர்—பாதாளலோக தேவன்! இவனிடம் மூன்று அற்புதப் பசுக்கள் உண்டு! அற்புத சக்தி படைத்த வேறு பல பொருள்கள் உண்டு! இவைகளை யாரும் களவாடாமலிருக்க, மூன்று நாரைகள் காவல் புரிந்த வண்ணம் இருந்துவந்தன! இவ்வளவு முன்யோசனையுடன் இருந்தானே அந்தத் தேவன், அவனுக்கு நேரிட்ட கதியைக் கேளுங்கள்! ஒரு கவிவாணன், மூன்று நாரைகளையே களவாடிக்கொண்டு போய்விட்டானாம்!! பசுக்களை, குட்டி தேவதைகள் களவாடிக்கொண்டு போய்விட்டனராம்!! இம்மட்டுமா! மகளை; யாரோ ஒரு தேவன், களவாடிக்கொண்டு போய்விட்டானாம்! ஐயோ பாவம்!—என்று இதற்குள் பரிதாபம் காட்டிவிடாதீர்கள்! மைடர் தேவன், நாரைகளையும் பசுக்களையும், மகளையும் மட்டுமல்ல, மனைவியையும் பறிகொடுத்து விட்டானாம். அவனுடைய மனைவியை அபகரித்துச் சென்ற தீயோன யார், அசுரன் யார், அக்ரமக்காரன் யார், யார் அந்த இராவணன்? யார் அந்தக் கொடியவன்? என்று பக்த சிகாமணிகள் பதை பதைத்துக் கேட்கவும் முடியாது, ஏனெனில், மைடர்