உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரமிழந்த கடவுள்

241


இத்தகைய கல்யாண குணம் படைத்த டாக்டா தேவனுக்கும் போவான் தேவிக்கும், பிரிகித், அங்கஸ், மைடர், ஆக்மா, பாட்ப், என்று ஐவர் பிறந்தனர்—கைலையில் பிறக்கவில்லையா, விநாயகர், முருகன், என இரு குமாரர்கள், அதுபோல!

இந்த ஐவரில், அங்கஸ் தேவன், அழகன்—தங்க யாழ் உடையவன்—அவனுடைய முத்தங்கள், பறவைகளாகிவிடுமாம்! இந்தத் தேவன்தான், தன் உடன்பிறந்தோனான் மைடர் தேவனின் மனையாட்டியை அபகரித்துக் கொண்டு சென்றவன்.

ஆக்மா தேவன், தேன் மொழியான்—அவன் அருள் பெற்றோர் கவிவாணராவர்!

கடைசி குமாரன் பாட்ப்! இந்தக் கடவுள்தான் டாக்டா தேவனுக்குப் பிறகு, அரசோச்சலானான்.

செந்நிறத்தான் என்ற சிறப்புப் பெயர் உண்டு, பாட்புக்கு—பொன்னார் மேனியனே! என்றும் கார்நிறமேனியன் என்றும், சிவனையும் விஷ்ணுவையும் இன்று இங்கு பாடித் தொழுகிறார்கள், இருட்டறையில் பிரிட்டன் இருந்தபோது பாட்ப் தேவனை, செந்நிறத்தானே! என்று பாடித் தொழுதனர்—மஞ்சள் நிற வேலாயுதம், சிகப்பு நிற வேலாயுதம்–பழி தீர்ப்போன் என்ற பெயருடைய வாளாயுதம், பெருங்கோபன், சிறுங்கோபன் எனும் பெயருடைய வாட்கள், அலை அழிப்போன் எனும் பெயர் கொண்ட ஓடம், நிலத்திலும் நீரிலும் செல்லத்தக்க குதிரை, மாயக் கவசம், மந்திர வாள், இவைகள், செந்நிறத் தேவனிடம்!! இவை மட்டுமல்ல! அருமையான பல பன்றிகள் வைத்திருந்தானாம் இந்த பகவான்! கண்ணன் ஆடுமாடுகளை மேய்த்தவனல்லவா—பிரிட்டனில் பகவான் பன்றிகளை மேய்த்திருக்கிறான். அடிக்கடி அருமையான விருந்தளிப்பானாம் இந்தத்

16