கரமிழந்த கடவுள்
243
நற்கருத்துக்களும் காணோமே, என்ற எண்ணம் பிறக்கவே நெடுங்காலம் பிடித்தது. பாயாசத்தைப் பருகுபவன் ட்ரூயிடே தவிர டாக்டா தேவனல்ல, என்ற எண்ணமே தலைகாட்டப் பயப்பட்டது நெடுங்காலம். மெள்ள மெள்ள ஆனால் தொடர்ந்து, அறிவு, பரவலாயிற்று—சிந்திக்கத் தொடங்கினர்—ஆராயத் தொடங்கினர்—காரணம், விளக்கம், தேடலாயினர். பூஜாரிகளின் புனிதக் கதைகள் பொய்யுரைகள் என்ற தெளிவு பிறந்தது. பிறந்ததும், அதை வெளியே எடுத்துக் கூறத் துணிவின்றி இருந்தனர், சில காலம். பிறகு ஒருசிலர், பேசலாயினர்—பேசினோர் பெருந்தொல்லைக்கு ஆளாயினர். மத ஆதிக்கக்காரர்களின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்ட சிலர், உயிரை இழந்தாலும் கவலையில்லை, உண்மையை உலகுக்கு அறிவிப்பேன் என்று கூறினர். உறுமினர் ட்ரூயிட்டுகள்! ஊராள்வோனை ஏவினர், உத்தம மதத்தைப் பழிக்கும் உலுத்தர்களின் தலையை வெட்டும்படி. தலைகள் வெட்டப்பட்டன! பகுத்தறிவாளர் படையின் முதல் வரிசையினர், பிணமாயினர். ஆனால், அடுத்த வரிசை, அதற்கு அடுத்த வரிசை, புதுப்புது வரிசைகள், என்று முன் வந்த வண்ணம் இருந்தனர் பகுத்தறிவாளர். தலைகளைச் சீவினோர் களைத்துப் போயினர்—பாமரர் மேலும் தெளிவு பெற்றனர். பகுத்தறிவுக்கணைகள் வேக வேகமாகக் கிளம்பின—மதப் போர்வைகளைக் கிழித்தெறிந்தன. ட்ரூயிட் பயப்படலானான்! பதறினான்! பக்கத் துணையாக படை, முடி தரித்தோன், மாளிகைவாசி ஆகியோரைச் சேர்த்துக்கொண்டான்—பலன் இல்லை! காரணம் காட்டு, இல்லையேல் கடையைக் கட்டு! என்று முழக்கமிட்டனர் பகுத்தறிவாளர். காரணம் என்ன காட்டமுடியும்! ஒரு கடவுளின் மனைவியை இன்னொரு கடவுள் திருடுவதற்கும், குழந்தையின் இதயத்திலே குவலயத்தையே அழிக்கும் கொடிய பாம்புகள் குடி