244
மாஜி கடவுள்கள்
புகுந்ததற்கும், காரணம் என்ன காட்டமுடியும்! ட்ரூயிட் தன் காலம் முடிவுற்றது என்று உணர்ந்தான், ஆதிக்கத்தை இழந்தான். பூஜாரி போகும்போது அவனுடைய கற்பனை உருவங்கள் மட்டும் போகாதிருக்க முடியுமா! டாக்டா தேவன், மைடர், அங்கஸ், பைல் தேவி, என்ற கடவுட் கூட்டம் அவ்வளவும், மறைந்தன—மாஜிகளாயின! ஒரு காலத்திலே ஐந்தாறு நாடுகளை ஆட்டிப் படைத்த கோலாகலக் கடவுள்கள், மாஜிகளாயின! இங்கு இன்றும் உள்ள காடன், மாடன், காட்டேரி, இருளன், இடும்பன், ஏகாத்தா எனும் தேவதைகளைவிட, செல்வாக்கு அதிகம் பெற்றிருந்த, டாக்டா, மைடர், அங்கஸ், என்பன போன்றவைகள் எல்லாம், பிரிட்டனில், அறிவுத் தெளிவு ஏற்பட்டதும், மாஜி கடவுள்களாயின.
சூரசம்மாரம், நம் நாட்டிலே இன்றும் திருவிழாவல்லவா! புராணம், தன் பிடியிலேதான் மக்களை வைத்துக் கொண்டிருக்கிறது. பாமரர், சூரனுடைய கோரஸ்வரூபம் உட்பட, புராணத்திலே குறிப்பிடப்படும் சகலவற்றையும் நம்புகிறார்கள், நம்ப மறுப்பவனை நாத்திகன் என்று நிந்திக்கிறார்கள். மற்றும் சிலரோ, இவைகளுக்குத் தத்துவாரத்தம் கூறி, புத்துயிரூட்டப் பார்க்கிறார்கள், சித்திர நடையும், ஓசை அழகும், உவமை நயமும், இந்தக் கதைகளிலே எவ்வளவு நிரம்பியுள்ளன! செவிச்சுவை உணரா மாக்களன்றோ இத்தகு கதைகளை ரசிக்க மறுக்கும்! என்று ஏசுவர், எதுகைமோனை வணிகர்கள். நாரை நாதனும், பாயாச பகவானும், பிரிட்டனிலே இருந்தார்களய்யா, கோயில் கட்டிப் பூஜித்தனர் மக்கள். எனினும், அறிவு வளர வளர, கடவுட் தன்மைக்கும் புராணக் கற்பனைகட்கும் நேர்மாறாக இருப்பதை உணர்ந்தனர்—மாஜிகளாயினர் அந்தக் கடவுள்கள் என்று எடுத்துரைத்தாலோ, ஏடா!மூடா! எமது