கரமிழந்த கடவுள்
247
உண்மைக் கரம், எப்படிப் பயன்படுமோ அதேபோல இந்த வெள்ளிக் கரம், நுவாடா கடவுளுக்குப் பயன்பட்டது எனினும், அங்கம் இழந்தவன் கடவுளாக அரசோச்சுவது முறையல்ல, என்று எண்ணிய கடவுளர் கூட்டம். நுவாடா தேவனைப் பீடத்திலிருந்து இறக்கிவிட்டு, புதிய கடவுளை பீடமேற்றத் தீர்மானித்ததாம்!
சமுத்திர லோகத்திலே அரசோச்சிக்கொண்டிருந்த கடவுளர் பலர்! மூலக் கடவுள் அங்கு, எலாதன்—அவனுடைய திருக்குமாரனாம், ப்ரெஸ் தேவனைத் தேர்ந்தெடுத்தனர், கடவுளாக வீற்றிருந்து ஆட்சி நடாத்த!
ப்ரெசுக்கு, இது மட்டுமல்ல, டாக்டா தேவனின் திருக்குமாரி ப்ரிகத் தேவியைத் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பும் தரப்பட்டது.
பழைய கடவுள் கரமிழந்து பதவி இழந்தார்.
புதிய கடவுளாகப் ப்ரெஸ் பீடமேறினார், பரிகத் தேவியாருடன்!
கடவுள் உலகுச் சேதிதான்—காட்டுராஜாக் கூட்டத்துக் கதை அல்ல!!
அரசாள வந்த ஆண்டவன் சமுத்திரலோகவாசிகளிடமே அதிகப் பிரியம் கொண்டவன். எனவே, புதிய பிரஜைகளைக் கொடுமையாக நடத்தலானான். தாங்கொணா வரிச் சுமைகள்! சொல்லொணாக் கஷ்டங்கள்! பழைய கடவுள்களெல்லாம், பஞ்சத்தால் அடிபட்டு, எலும்பு முறியப் பாடுபட வேண்டி நேரிட்டதாம். டாக்டா தேவனே, கோட்டை கொத்தளம் கட்டிப் பிழைக்கும் நிலை அடைந்தார்! கடவுளா கோட்டை கொத்தளம் கட்டினார்—என்று கேட்பீர், கேவிக்குரலில், அவ்விதம் அன்று அறியாமையிலே உழன்ற மக்கள் நம்பினர்; பிட்டுக்கு மண் சுமந்த