உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

மாஜி கடவுள்கள்


படலத்தைத் தித்திக்கும் தமிழில் திருவாளர் பண்டிதர் ரேடியோ மூலம் பரப்பிடக் கேட்கிறோம், இங்கு, இன்று! கொடுங்கோலாட்சி கண்டு குமுறினர் கடவுளர்கள், ப்ரெஸ் கடவுளோ, புதிய அரசை ஆட்டிப் படைத்து வந்தான்.

இந்நிலையில், மருத்துவத் தேவன், மகன் மையாக் என்பவன், தன் மாந்தரீக மருத்துவத் திறமையால், நுவாடா கடவுளின், வெட்டுண்ட கரத்தை, புதைகுழியிலிருந்து கொண்டுவரச் செய்து ஒட்டவைத்துவிட்டான்! கடவுள் இழந்த கரத்தைப் பெற்றார். எல்லோரும் களித்தனர்—ஒரு கடவுளுக்கு மட்டும் கோபம் கொப்பளித்தது! யாருக்கு? மையாக் தேவனின் தந்தையாம் மருத்துவத் தேவனுக்கு! என்னை மிஞ்சும் திறமைசாலியாகவா, என் மகன் இருப்பது, என்று எண்ணினான், கோபமும் பொறாமையும் குபுகுபுவெனக் கிளம்பிற்று. மகனை அழைத்தான், சம்மட்டி கொண்டு மண்டையை நொறுக்கினான். மும்முறை மையாக் தன் மருத்துவ முறையால் உயிர் தப்பினான், நான்காம் அடி மண்டையைப் பிளந்ததுடன், மூளையையே இரு துண்டுகளாக்கிவிடவே, மையாக் தேவன் மாண்டு போனான்! அவனைப் புதைத்த இடத்திலே 365 புல் முளைத்தனவாம்! அவை ஒவ்வொன்றும், மனிதனுடைய உடலிலே உள்ள 365 நரம்புகளிலேயும் ஏற்படும் நோய்களைத் தீர்க்கும் அற்புத மூலிகைகளாயினவாம்!

எப்படி இருக்கிறது தந்தை—மகன் உறவு,—கடவுலுலகில்!!

நுவாடா பழைய பொலிவும் வலிவும் பெற்றது, பழைய கடவுள்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டிற்று.

இந்த மாறுதலைச் சட்டை செய்யவில்லை, புதிய கடவுள்—தன் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. கவிதைக் கடவுளான ஆக்மா தேவனையே