கரமிழந்த கடவுள்
249
அவமதிப்பாக நடத்தினான், கவிக் கடவுள் கடுங்கோபம் கொண்டு, ஏசல் பாடினார் ப்ரெசைக் குறித்து, உடனே புதிய கடவுளின் முகமெலாம் கொப்புளங்கள் கிளம்பி, அகோரமாகிவிட்டன. கூடினர் கடவுள்கள்—இனி இந்த அவலட்சணத்தை நாங்கள் ஆளவிடோம் என்று முழக்கமிட்டு, ப்ரெசை விரட்டினர் பழைய கடவுளாம் நுவாடாவுக்கு முடிசூட்டினர்
முடி இழந்த ப்ரெஸ், சமுத்திரலோகம் சென்று தந்தையிடம் முறையிட, தந்தை தன் படையைத் திரட்டிக் கொண்டு கிளம்பினார், போருக்கு! விண்ணுலகுக்கும் சமுத்திர லோகத்துக்கும் போர்!!
விண்ணுலகிலும் கடவுள் பெருமன்றம் கூடிற்று போர்த்திட்டம் வகுக்க.
லக் தேவன், வந்தான் விண்ணுலகினருக்குத் துணை செய்ய. துவக்கத்திலே அவனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அவன் தன் ஆற்றலை விளக்கிக் காட்டினான்—சகலகலா வல்லவன்—சர்வ சக்தி வாய்ந்தவன் லக் தேவன் என்பது விளக்கப்பட்ட பிறகு, விண்ணகத்தார், லக் தேவனை பதின்மூன்று நாள் கடவுள் வேலை பார்க்கும்படி அனுமதித்தார்கள்.
அந்த நாட்களிலே, சமுத்திர லோகாதிபதி, விண்ணுலகிலே வரி வசூலித்து வருவதற்காக 81 தூதுவர்களை அனுப்ப, லக் தேவன், அவர்களிலே 9 பேர் தவிர மற்றவர்களைக் கொன்றுவிட்டான்.
உயிர் தப்பிய 9 பேர்களும் ஓடோடிச் சென்று இதைக்கூற, எலாதனும் அவனுடைய பரிவாரமும் திகிலும் ஆச்சரியமும் கொண்டு, விண்ணுலகுக்குத் துணை நிற்கும் புதிய வீரன் யார் என்று யோசிக்கலாயினர்.