உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

மாஜி கடவுள்கள்


“அந்தப் பெரும் பலசாலி வேறு யாருமல்ல, என் பேரப்பிள்ளைதான். என் மகளை, விண்ணுலக மருத்துவ தேவனின் மகன் கயானுக்குத் தந்தேனல்லவா. இந்த லக் தேவன் கயானுவுடைய குமாரன்தான், என் பேரன்!” என்று விளக்கம் கூறினான் பாலர் தேவன்.

பேரனானால் என்ன, போருக்கழைக்கிறான் கிளம்புவோம், என்று ஆர்ப்பரித்தனர், கடலுலகக் கடவுளர்.

ஏழாண்டுகள் இரு தரப்பும் படை திரட்டின! பிறகு மூண்டது பயங்கரமான போர்!

பாலர் தேவன் தீக் கண்ணன்! அவனுடைய நெற்றியிலே உள்ள கண் மூடிக் கிடக்கும்—இறப்பையைத் தூக்கிப் பிடித்தால், பார்வையில் பட்டோர் தீய்ந்து போவர்! களத்திலே நின்றான் பாலர் தேவன்—கண்ணைத் திறவுங்கள் இந்தக் கடவுட் கூட்டத்தைச் சாம்பலாக்கிவிடுகிறேன் என்றான்—கண் இறப்பையைத் தூக்கினர், ஆனால் லக் தேவன், ஒரு மந்திரக் கல்லை எடுத்து வீச, அது பாலர் தேவனுடைய தீக்கண்ணில் பட்டு, கண் தெறித்து, பின் புறம்விழ, கடலுலகக் கடவுளர் படை சாம்பலாயிற்று! எஞ்சியிருந்தோர் பீதி கொண்டனர்! படை வரிசையிலே பெருங்குழப்பம்—பின்வாங்கி ஓடலாயினர், லக் தேவனின் படைகள் துரத்தலாயின! இந்தப் பெரும் போருக்குக் காரணமாக இருந்த ப்ரெஸ் பிடிபட்டான். லக் தேவனிடம் உயிர்ப்பிச்சைக் கேட்க, லக் தேவன், விண்ணுலகு தழைக்க ஒரு தேவ இரகசியம் கூறவேண்டுமென்று நிபந்தனை விதித்தான், ப்ரெஸ் இசைந்தான். எந்தநாளில் உழுவது, எந்தநாளிலே விதைப்பது, எந்தநாளிலே அறுவடை செய்வது, எனும் தேவரகசியத்தைத் தெரியச் செய்தால் உயிர் பிழைக்கலாம் என்று லக் தேவன் கூற, செவ்வாய்க்கிழமைதான், உழவுக்கு, விதை விதைக்க, அறு-