உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரமிழந்த கடவுள்

251


வடைக்கு ஏற்றநாள் என்ற மாபெரும் தேவ இரகசியத்தை ப்ரெஸ் கூறி, உயிரைக் காப்பாற்றிக்கொண்டான்.

இதற்கிடையில், டாக்டா தேவனுடைய அற்புத யாழ் கடலுலகத்தவரால் களவாடப்பட்டுவிட்டது. அதை மீட்பத்ற்காக லக் தேவனும் டாக்டா தேவனும் கடலகம் சென்றனர்—அங்கு ஒரு சுவரிலே யாழ் தொங்கவிடப்பட்டிருந்தது. கடவுள்களின் அற்புத சக்தி போலவே, அவர்களின் ஆயுதங்களுக்கும் உண்டு, என்ற எண்ணத்தால்தானே, இங்கு, ராமபாணம், ராவணனைக் கொன்று, இதயம் பூராவும் துளைத்து, பிறகு ஏழு கடலில் குளித்து, பிறகு இராமனுடைய அம்புறாத்தூணியிலே வந்து சேர்ந்தது, என்று புராணம் கூறுகிறது—இப்படி ஒரு புளுகா என்று கேட்பவர்மீது கண்டனத்தை வீசுகிறார்கள் பக்தர்கள்—இதே முறையிலே, பிரிட்டனில் பழங்காலப் புளுகன் கூறிய கதையிலே, கடவுளின் ஆயுதமும் அற்புத சக்தி வாய்ந்ததுதான்—எனவே, யாழ், தன் எஜமானனாம் டாக்டா தேவன் வருவது தெரிந்து, குதித்தோடி வந்ததாம்—வருகிற வழியிலே ஒன்பது கடலகக் கடவுளரையும் கொன்றதாம்.

டாக்டா தேவன், யாழை எடுத்து, நீலாம்பரி வாசிக்க, கடலகக் கடவுளர் நித்திரையிலாழ்ந்தனர், விண்ணகத்தார் வீடு திரும்பினர்.

விண்ணகக் கடவுளருக்கும் கடலகக் கடவுளருக்கும் நடைபெற்ற போராட்ட காதை இது!

வீரம், அற்புதம், சோகம், வியப்பு,—எது இல்லை, இந்தக் கதையிலே!

தத்துவார்த்தம் கூறவாவது, முடியாதா, இந்தக் கதைக்கு—இருளுக்கும் ஒளிக்கும் நடைபெறும் போராட்-