252
மாஜி கடவுள்கள்
டமே இந்தப் புராண உருவிலே தாப்பட்டிருக்கிறது என்று வாதாட முடியாதா! முடியும், ஆனால் செய்யவில்லை!! அறிவு வென்றது. இவைகளெல்லாம், அர்த்தமற்றன என்று கண்டுகொண்டனர்—மனதிலே இவ்விதமான கதைகளைப் புகவிட்டால், மார்க்கத்தின் புனிதத்தையோ, கடவுட் கொள்கையின் மேன்மையையோ, உணரமுடியாது, என்று தெளிவு பெற்றனர், எனவே கரமிழந்த கடவுள், தாரமிழந்த கடவுள், போரிட்டு மாண்ட கடவுள், பழைய கடவுள், புதிய கடவுள், ஆண் கடவுள், பெண் கடவுள், அம்பு வீசும் கடவுள், அற்புத யாழ் வாசிக்கும் கடவுள், என்ற பலவிதமான கடவுள்களையும், கருத்தைக் குழப்பிவிடக் கூடிய, கற்பனைகள், மனித குலத்திலே மாசு மனம் படைத்தோர் காசு தேடக் கட்டிவிட்ட கதைகள், என்று ஆண்மையாளர்கள் கூறினர்—டாக்டாவும் நுவாடாவும், ப்ரிகத்தும் ப்ரெசும், அங்கசும் மைடரும், லக்தேவனும் பிறரும், மாஜி கடவுள்களாயினர்!! மானிலத்திலே மதிக்கத்தக்க இடம் கிடைத்தது பிரிட்டிஷ் மக்களுக்கு. புனிதக் கதை, பூர்வீகச் சொத்து, தர்மோபதேசக் கதை, என்று சாக்குகளைக் கூறிக்கொண்டு, நம் நாட்டவர்தான், ராமபாணம், வேலாயுதம், சூலாயுதம், சிரமறுத்தது, திரிபுரம் எரித்தது, அமிர்தம் கடைந்தது, ஆலகாலம் உண்டது, பிட்டுக்கு மண் சுமந்தது பிள்ளைக்கறி கேட்டது, போன்ற பழங்காலக் கற்பனைகளை இன்றளவும் மெய்யெனக் கூறிக்கொண்டு பொய்யறிவிலே நெளிந்து பாழ்படுகின்றனர். கடவுளருக்குத் தொட்டிலும் கட்டிலும், வாழ்வும் தாழ்வும், பிறப்பும் இறப்பும், போரும் பிறவும் உண்டு என்றுதான் முதலிலே எல்லா நாட்டவரும் எண்ணினர்—அங்கெல்லாம் மெய்யறிவு ஆட்சி செய்கிறது—புராணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விரட்டப்பட்டுவிட்டது–இங்கோ, கேள்வி கேட்பவனையே, நாத்தீகன் என்று நிந்திக்கிறார்கள். பிரிட்-