254
மாஜி கடவுள்கள்
ஸ்பெயின் நாட்டு மனிதர்கள், அயர்லாந்து வளம்பற்றியும் அங்கு வாகை சூடி வாழ்ந்துவரும் கடவுளர்களைப்பற்றியும் கேள்விப்பட்டு, அப்படிப்பட்ட நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்று தீர்மானித்தனராம். வீரத் தலைவர்கள் சிலர் கிளம்பினர், படைகளுடன் கடவுளரின் அரசைக் கவிழ்க்க, போர் மூண்டது, மாந்தராக்கும் கடவுளருக்கும். கடவுட் கூட்டம் தோற்கடிக்கப்பட்டது. விரண்டோடினராம் கடவுளர், வெற்றி வீரர்களான மாந்தரிடம் அயர்லாந்தை விட்டுவிட்டு! இந்தக் கடவுட் கதை எப்படி இருக்கிறது! மாந்தரால் தோற்கடிக்கப்பட்டு, மணிமுடி இழந்து, மண்டலமிழந்து, கண்காணாச் சீமை தேடி, கடவுளர் கூட்டம் விரண்டோடுகிறது!
இப்படி ஒரு ‘தேவமாகதை’ அயர்லாந்தில்!
இன்று இந்தக் கற்பனையையா, வழிபாட்டுககுரிய மார்க்கமாகக் கருதுகிறார்கள், அந்நாட்டு மக்கள்? இல்லை, இல்லை! அவர்கள் அறிவு பெற்றுவிட்டார்களே, எப்படி ‘அபத்தங்களை’ நம்புவர்! இங்கு நம் நாட்டிலே, ஆண்டுதோறும், மண்ணாலே துரியன் உருவம் செய்து, மரக்கத்தி கொண்டு, பீமன் வேடம் அணிந்த பக்தன், வெட்டும் விழா நடத்துகின்றனர்! அதனைப் புண்யகாரியமென்று கருதுகின்றனர். அயரும் பிரிட்டனும் அந்த நாள் அர்த்தமற்ற கதைகளை, கவைக்குதவாதன, என்று கண்டு கொண்டன பல நூற்றாண்டுகளுக்கு முன்பே.
கடவுட் கதைகள், பொருத்தமும் அருத்தமும் இல்லாதிருக்கலாம், ஆனால், அவைகளிலே பொதிந்துள்ள நீதிகள், தேவையானவையன்றோ என்று பேசும் நாவுக்கரசர்களும், அந்தக் கதைகளிலே கலாரசம் காண்கிறோமே