கரமிழந்த கடவுள்
259
மன்னனோ, தாங்கொணா மனவேதனை அடைந்து எங்கு இருந்தாலும், என் எழிலரசியை நான் கொணர்ந்தே தீருவேன் என்று சூளுரைத்துவிட்டு, படை திரட்டிக் கொண்டு, எட்டுத் திக்கும் சென்று தேடினான். கடைசியில், பாதாள லோகத்திலே மைடர் இருப்பதும், அங்குதான் எடெயின் இருப்பதும் தெரியவந்தது. கடவுளருலகு சென்று, பூமியைத் தோண்டலானான்—பாதாள லோகம்சென்று பாவையை மீட்பேன் என்று கூறினான்.
பாதாள லோகத்திலே மைடர் பதைத்தான்! பாவி தோண்டியபடி இருக்கிறானே, நமது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிடுவான் போலிருக்கிறதே, பிறகு, எல்லோருக்குமே தெரிந்துவிடுமே பாதாளலோகம், தெரிந்துவிட்டால், நமது மகிமை மங்கிவிடுமே, என்ன செய்வது என்று பதைத்து, எடெயின் போன்ற ஐம்பது எழில் மங்கையரை அனுப்பினான், மன்னன்முன்! மன்னனோ, “இந்தப் பூங்கொடிகளுக்காகவா நான் பூலோகத்திலிருந்து பாதாளலோகம் நுழையப் பாதை வெட்டுகிறேன்! எனக்கு, என் எழிலரசிதான் வேண்டும்”—என்று பிடிவாதமாகக் கூறிவிட்டான். கடைசியில், தன் அரசு அழியாமலிருக்க எடெயினைத் தருவது தவிர வேறு மார்க்கமில்லை என்பது மைடருக்குத் தெரிந்துவிட்டது. “அழைத்துச் செல்” என்று கூறிவிட்டான் ஆயாசத்துடன். அழகி எடெயினை அழைத்துக்கொண்டு சென்றான், அயர் மன்னன்!
இப்படி ஒரு புராணம்!! இன்பவல்லிகளுக்காகக் கடவுளர் பட்டபாடும், கெட்டகேடும் இவ்விதமாக இருந்திருக்கிறது—புராணப்படி. மனிதத் தன்மைக்கே மாறானதும், ஒழுக்கம், நீதி, நேர்மை ஆகிய எந்தப் பண்புக்கும் முரணானதுமான நிகழ்ச்சிகள்—இவை தேவகதைகள்! தெளிவற்ற நிலையிலே, அயர் மக்களும், பிரிட்டானியரும்