260
மாஜி கடவுள்கள்
இருந்தபோது காமச் சேட்டைகளைக்கூடக் கடவுளரின் திருவிளையாடல் என்றே எண்ணினர், பயபக்தியுடன். ஒரு கதையாவது, காரணம் கேட்டால், விளக்கம் கேட்டால், நிற்காது நிலைக்காது!—பொறுத்தமற்ற சம்பவங்களைப் பின்னித் தருகிறான் புராணீகன், மேலே ‘கடவுள் முலாம்’ பூசித் தருகிறான். எனினும், ஏன், எப்படி, என்று கேட்பவன், பாபி!! எனவே, இத்தகைய ஆபாசமான கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டனர், பூஜாரி பெருமையாகக் கூறியபோது. இப்படிப்பட்ட இழி செயல்களை இறைவன்மீது ஏற்றிக் கூறுவது, மடைமை மட்டுமல்ல, கொடுமையுமாகும், என்ற அறிவு பிறக்க நெடுங்காலம் பிடித்தது. ஆனால் அறிவு அரும்பளவு தெரிந்தது, அது வளர, மலர, இடமளித்தனர் அங்கெல்லாம்—இங்கோ கபடர்கள், கருத்துத் துறையிலே புது மலர் பூத்திடக்கூடாது என்பதற்காக, மிருகத்தனமான முறைகளைக்கூடக் கையாண்டிருக்கிறார்கள். கருத்துலகத்துக் கருகிய மொட்டுகள் இங்கு ஏராளம்! அவ்வளவு திறமையாக மத ஆதிக்கக்காரர், மடைமையைக கட்டிக் காத்துக் கொழுக்க வைக்கிறார்கள். எனவேதான், பிரிட்டனிலும், அயரிலும், ஸ்பெயினிலும், பிறநாடுகளிலும் ஏற்பட்ட அறிவுப் புரட்சி இங்கு, பையப்பைய, பயந்து பயந்து, அக்கம்பக்கம் பார்த்துப் பார்த்து, நுழையவேண்டி இருக்கிறது!
அங்கு, எண்ணற்ற மாஜி கடவுள்கள்! அறிவு பரவிற்று, இருளுருவங்கள் தானாக மறைந்தன!
★