உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

17


என்று கிரேக்கர்கள் நம்பி, அந்த மூன்று தேவதைகளையும் வணங்கி வந்தனர்.

பானஸ் (Paunus)

இங்கே சனிபகவான் இருப்பதுபோல், கிரேக்க நாட்டிலே சாட்டர்ன் என்றோர் கடவுள். அந்தக் கடவுளின் பேரப்பிள்ளை பானஸ். பானஸ் வயல்கள், ஆடு மாடுகள் இவற்றின் ரட்சகன், என்று கொண்டாடப்பட்டு, கடவுளாகக் கும்பிடப்பட்டார், லாட்டியம் தேசத்தில்.

பைடிஸ் (Fides)

சொன்னசொல் தவறாத குணத்தைக் கடவுளாக்கி பைடிஸ் என்ற பெயரில் ரோம் நாட்டவர்கள் வணங்கினர். இந்தக் கடவுளுக்கெனத் தனிக்கோயில் கட்டித் திருவிழா நடத்தி வந்தனர்.

ப்ளோரா (Flora)

தோட்டங்களின் தேவி, மலர்களின் மாதா, ப்ளோரா. ரோம் நாட்டவர் இப்படி ஒரு கடவுளையும் வழிபட்டு வந்தனர்.

ப்ரியர் (Prear)

நார்வே ஸ்வீடன் காடுகளின் கடவுள், ப்ரியர். வெளிச்சம், மழை, முதலியவற்றைத் தந்து, சாந்தி சுபிட்சம் சகலமும், தரும் கடவுளாகப் ப்ரியரைக் கும்பிட்டனர்.

ப்ரிகா (Frigga)

நார்வே நாட்டுக் கடவுள். பூமாதேவி, என்று இங்கு புராணத்தில் கூறப்படும் கடவுள்போல, அந்த நாட்டுக்குப் ப்ரிகா. இந்தக் கடவுளை ஓடின் Odin என்ற கடவுள் கலியாணம் செய்துகொண்டார்.


2