உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

மாஜி கடவுள்கள்


ஹெஸ்ப்ரிடஸ் (Hesperides)

ஹீரா, ஜூவசைக் கல்யாணம் செய்துகொண்டபோது, சீதனமாகத் தரப்பட்ட பொன் ஆப்பில் பழங்களைப் பாதுகாக்க ஏற்பட்ட தேவகன்னியர்கள் ஹெஸ்ப்ரிடிஸ் என்பவர்கள். இவர்களையும் கிரேக்கர்கள் – தொழுது வந்தனர்.

ஹைஜியா (Hygea)

கிரேக்கர்கள் ஆரோக்கிய தேவதையாக, ஹைஜியாவை வழிபட்டு வந்தனர். இந்தக் கடவுள், கன்னி. கையில் ஒரு கோப்பையுடன் இருப்பதாகவும், அந்தக் கோப்பையிலிருப்பதை ஒரு பாம்பு பருகுவதாகவும் சித்தரித்துள்ளனர்.

ஹைமன் (Hymen)

கலியாணக் கடவுள், கிரேக்கருக்கு, இந்த ஹைமன். இந்தக் கடவுள் அப்பாலோ, கடவுளின் மகன்.

இஸ்கால்பியஸ் (Aescualpius)

அப்பாலோ கடவுளின் குமாரன், மருந்துக்குக் கடவுள். பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும் தடியைக் கையிலே, வைத்திருப்பான்.

போமோனா (Pomona)

ரோம் நாட்டவர் தங்கள் தோட்டங்களில் பழ வகைகள் செழிப்பாகக் கிடைப்பதற்காக, போமோனா என்ற தேவதையைப் பூஜித்து வந்தனர்.

ப்ரோடியஸ் (Proteus)

கிரேக்க நாட்டுக் கடல் தேவன், இந்த ப்ரோடியஸ். எதிர்காலத்தில் நடக்க இருப்பதைக் கூறும் சக்தி இக்கடவுளுக்கு. ஆனால், திடீர் திடீரென்று உருமாறும். அப்-