உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாஜி கடவுள்கள், அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாஜி கடவுள்கள்

21


போது ஆரூடம் பலிக்காது. இயற்கையான உருவிலிருக்கும்போது சொன்னால்தான் ஆரூடம் பலிக்கும்.

ரா (Ra)

ஈஜிப்ட் நாட்டவரின் முக்கியத்துவம் வாய்ந்த கடவுள். அந்நாட்டுச் சூரிய பகவான்.

ரீயா (Rhea)

கிரேக்கக் கடவுள்களான ஜூவஸ், ப்ளூடோ, ஹீரா முதலியவர்களின் தாயார்.

வீனஸ் (Venus)

காதல் தெய்வமாக, ரோம் நாட்டவர் வீனசை வணங்கினர்.

வெஸ்ட்டா (Vesta)

ரோம் நாட்டிலே குடும்பத் தேவதையாக வெஸ்ட்டாவை வணங்கி வந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் வெஸ்ட்டாவுக்குப் பூஜை அறை உண்டு.

வல்கன் (Vulcan)

ரோம் நாட்டுக்கு வல்கன், அக்னி தேவனாக விளங்கினான். ஜூபிடர் கடவுளுக்கு வல்கன், இடிமின்னல் எனும் ஆயுதம் தயாரித்துக் கொடுப்பான்.

கிரீட் தேவி (Crete Devi)

கிரீட் நாட்டு நாக கன்னிகையாக ஒரு தெய்வம் இருந்தது.

ஜூவஸ் (Zeus)

கிரேக்கரின் மூலக் கடவுள் ஜூவஸ். தேவலோகத்தில், கையில் (மழுவாயுதம்போல்) இடிமின்னல் ஆயுதம் தாங்கிக் கொலுவீற்றிருக்கிறார். தேவதேவனாகப் போற்றப்பட்ட ஜூவஸ், க்ரோனாசுக்கும் ரியாவுக்கும் தோன்றி